டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி!

பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

பி.எம் நரேந்திர மோடி படம் கடந்த இரண்டு வாரமாக தேசிய அளவில் பெரிய பிரச்சனையாக இருந்தது. தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து, பின் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்து, பின் சுப்ரீம் கோர்ட் சென்று தற்போதுதான் இந்த பிரச்சனையில் தீர்வு எட்டப்பட்டு இருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பை அடுத்தும், அடுக்கடுக்கான புகார்களை அடுத்தும் தற்போது படத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

ஜெயலலிதா மரண ஆணைய விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அப்போலோ மேல்முறையீடுஜெயலலிதா மரண ஆணைய விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அப்போலோ மேல்முறையீடு

 என்ன படம்

என்ன படம்

மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஓமங் குமார் இயக்கத்தில் ''பிஎம் நரேந்திர மோடி'' படம் வெளியாக உள்ளது. இந்த படம் இப்போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் விவேக் ஓப்ராய் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 தொடர் வழக்கு

தொடர் வழக்கு

இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டது. டெல்லி ஹைகோர்ட்டில் இது தொடர்பாக பல்வேறு மனுதாரர்கள் சார்பாக பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு டெல்லி ஹைகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது.

 நேற்று தீர்ப்பு

நேற்று தீர்ப்பு

நேற்று பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஏற்கனவே சென்சார் போர்ட் அனுமதி வழங்கிவிட்டதால் இதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறியது. படத்திற்கு தடை விதிப்பது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இந்த படம் நாளை வெளியாவதாக இருந்தது.

 தடை விதிப்பு

தடை விதிப்பு

தற்போது பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. தேர்தல் நேரத்தில் படத்தை வெளியிட கூடாது. எந்த அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தையும் வெளியிட கூடாது என்று கூறியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் இந்த படத்தை பார்க்க தனி குழு அமைத்துள்ளது. அவர்கள் படத்தை பார்த்து அறிவித்த பிறகே இந்த படம் வெளியாவது குறித்து முடிவு செய்யப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது.

English summary
ECI bans the PM Narendra Modi movie: Bans all political bio-pic movies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X