டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிஷன் சக்தி.. மோடியின் அறிவிப்பை ஆராய வேண்டும்.. தனி குழு அமைத்தது தேர்தல் ஆணையம்!

‘மிஷன் சக்தி’ குறித்த பிரதமர் மோடியின் பேச்சை ஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: 'மிஷன் சக்தி' குறித்த பிரதமர் மோடியின் பேச்சை ஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மிஷன் சக்தி திட்டம் குறித்து பிரதமர் மோடி இன்று அவசர அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம், விண்வெளியில் குறைந்த உயரத்தில் சென்று கொண்டு இருக்கும் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் ஏ-சாட் விண்வெளி தொழிநுட்பத்தை இந்தியா பெற்று இருக்கிறது என்று அவர் பேசினார்.

ECI set up a panel to look into the PM Modis Mission Shakthi announcement

இதன் மூலம் வானில் உளவு பார்க்கும் செயற்கைகோள்களை இந்தியா எளிதாக தாக்கி அளிக்க முடியும். இன்று தொலைக்காட்சியில் தோன்றிய அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஆனால் பிரதமர் மோடியின் இந்த திடீர் அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த அறிவிப்பு ஒரு தேர்தல் ஸ்டண்ட் என்றும் எதிர்க்கட்சிகள் கூறியது. அதேபோல் எதிர்க்கட்சிகளின் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து புகாரும் அளித்தது.

நேருவும், இந்திராவும்தான் அடிப்படை காரணம்.. மிஷன் சக்தி.. மோடிக்கு செக் வைக்கும் காங்கிரஸ்நேருவும், இந்திராவும்தான் அடிப்படை காரணம்.. மிஷன் சக்தி.. மோடிக்கு செக் வைக்கும் காங்கிரஸ்

தேர்தல் விதிகளை பிரதமர் மோடி மீறிவிட்டார் என்று புகார் அளித்தது. இந்த நிலையில் மிஷன் சக்தி குறித்த பிரதமர் மோடியின் பேச்சை ஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் விதிகளை மீறியுள்ளாரா என்று ஆய்வு செய்ய வேண்டும். பிரதமர் மோடி ஏன் இப்போது இப்படி ஒரு அறிவிப்பை ஏன் வெளியிட்டார். இதை அவசரமாக வெளியிட என்ன காரணம் என்று ஆராய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு அதற்காக குழு ஒன்றையும் அமைத்து இருக்கிறது.

ஆனால் இந்த குழு இத்தனை நாட்களுக்கு விசாரிக்க வேண்டும் என்று காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அதேபோல் குழுவில் யார் யார் இடம்பெற்று இருக்கிறார்கள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.

English summary
Election Commission of India set up a panel to look into the PM Modi's Mission Shakthi announcement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X