டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாக்டவுனை நீக்கிவிட்டு தொழில் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்:மோடியிடம் முதல்வர்கள் வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

டெல்லி: லாக்டவுன் காலத்தில் தொழில் நடவடிக்கைகளை ஒவ்வொரு கட்டமாக தொடங்க வேண்டும்; குறிப்பாக மாநிலங்களுக்குள் இத்தகைய நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் வலியுறுத்தினார்.

Recommended Video

    முதல்வர்களுடனான மீட்டிங்கில் மோடி கூறியது என்ன?

    லாக்டவுன் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மாநிலங்களின் முதல்வர்கள் முன்வைத்த யோசனைகளின் தொகுப்பு:

    Economic activity be restricted within states: CMs urge PM

    மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா கூறுகையில், மே 3-ந் தேதி வரை லாக்டவுனை அமல்படுத்தலாம். அத்தியாவசியப் பொருட்கள் சேவை, மருத்துவ சேவைகள் உள்ளிட்டவைகளுக்கு கட்டுப்பாடுகள் அனுமதி வழங்கலாம் என்றார். புதுவை முதல்வர் நாராயணசாமி கூறுகையில், கொரோனா தடுப்பு பணிக்கான அனைத்து மருத்துவ உபகரணங்களையும் மத்திய அரசு வழங்க வேண்டும். லாக்டவுனுக்குப் பிந்தைய காலத்தில் தொழிற்சாலைகள் முழு வீச்சில் செயல்படுவதற்கு மானிய உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்றார்.

    உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பேசுகையில், பொருளாதாரத்தை மீட்க வேண்டியது உடனடித் தேவையாக இருக்கிறது. தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் ஒவ்வொரு கட்டமாக மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும். பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்வதற்கான அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வது கட்டாயம். பொருளாதாரத்தை மீட்பதுதான் தற்போதைய முக்கியமான நடவடிக்கை என்றார். இமாசல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில், பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் லாக்டவுனை நீட்டிக்கலாம். பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். அதேநேரத்தில் மாநிலங்களிடையேயான போக்குவரத்துக்கு சிறிது காலம் தடை விதிக்கலாம் என்றார்.

    ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், லாக்டவுன் காலத்தில் பொதுவான விதிமுறைகள்- கட்டுப்பாடுகளை தேசிய அளவில் உருவாக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார மறுசீரமைப்புக்கு உதவியாக இருக்கும். நிதி ஆயோக் என்பது வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும். தேசிய அளவில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டாலும் முக்கியமான செயல்பாடுகளை அனுமதிக்க வேண்டும். ஒடிஷாவில் அனைத்து விதமான பொதுமக்கள் ஒன்றுகூடல்களையும் தடை செய்திருக்கிறோம். பொருளாதார நடவடிக்கைகளை மாநிலங்களுக்குள் மட்டுமே மேற்கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றார்.

    பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டம்.. 9 மாநில முதல்வர்களுக்கு மட்டுமே பேச அனுமதிபிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டம்.. 9 மாநில முதல்வர்களுக்கு மட்டுமே பேச அனுமதி

    பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், போலியோ சொட்டு மருந்து வழங்குவதைப் போல வீடுகள் தோறும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பீகாரில் இதுவரை 4 கோடி பொதுமக்களுக்கு கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

    English summary
    Chief Ministers of States had urged that Centre must be revived and the lockdown should be lifted.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X