டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிற மாநில தொழிலாளர்களுக்கு வேலை இல்லை.. வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.. ப.சி கடும் குற்றச்சாட்டு!

கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வரிசையாக டிவிட் செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வரிசையாக டிவிட் செய்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த 4 நாட்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு பொருளாதார திட்டங்களை அறிவித்து வநதார். கடந்த வாரம் 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

இதை தொடர்ந்து நான்காவது நாளாக இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்பை வெளியிட்டார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இதை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 பிரிவுதான்.. இனி சிவப்பு, பச்சை, ஆரஞ்ச் மண்டலங்கள் கிடையாது.. குஜராத் அரசு புதிய திட்டம்!2 பிரிவுதான்.. இனி சிவப்பு, பச்சை, ஆரஞ்ச் மண்டலங்கள் கிடையாது.. குஜராத் அரசு புதிய திட்டம்!

வரிசையாக டிவிட்

வரிசையாக டிவிட்

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் செய்துள்ள டிவிட்டில் மத்திய அரசுக்கு எதிராக கடுமையான புகார்களை அடுக்கி உள்ளார். அதில், இந்தியாவில் பிற மாநில தொழிலார்கள்கள் பலர் பிழைப்பு தேடி மற்ற மாநிலங்களுக்கு செல்கிறார்கள். ஆனால் தற்போது இவர்கள் எல்லோரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் வாழ்க்கை இதனால் கேள்விக்குறியாகி உள்ளது.

தொடர் புகார்

தொடர் புகார்

ராம் சரண் என்ற பிற மாநில தொழிலாளி ஒருவர் சொல்கிறார், நான் இறந்தால் குறைந்தது என்னுடைய வீட்டில் இறக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்கிறார்கள். இன்னொரு பப்பு என்கிற தொழிலாளி சொல்கிறார், நான் தினமும் பசியை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். என்னால் இனியும் இங்கே இருக்க முடியாது என்கிறார்.

வருமானம்

வருமானம்

அதோடு சிகாகோ பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் இரண்டும் செய்த ஆராய்ச்சியில் மக்களின் வார வருமானம் 89.2% குறைந்துள்ளது என்று கூறுகிறார்கள். இந்த டிவிட் கூறுவது போலவே இந்தியாவில் பல நிறுவனங்களில் பலருக்கு வருமான பிடித்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு உதவி

மக்களுக்கு உதவி

அசிம் பிரேம்ஜி மற்றும் வேணு ஸ்ரீனிவாசன் ஆகியோர் மக்களுக்கு உதவுவதற்காக மாதமா 5000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை ஏழை மக்களுக்கு தருவதாக கூறியுள்ளனர். அடுத்த மூன்று மாதங்களுக்கு இவர்கள் தருவதாக கூறியுள்ளனர், என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த தொடர் டிவிட்க்கள் மூலம் அவர் இந்தியாவில் ஏழைகள் பெரிய அளவில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறினார்கள் என்று கூறியுள்ளார்.

English summary
Economic Slowdown: P Chidambaram accuses Central government in his series of tweets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X