LIVE

2022 பட்ஜெட் கூட்டத்தொடர் LIVE: இந்திய பொருளாதாரம் 23FY 8-8.5% வளர்ச்சி அடையும் : பொருளாதார ஆய்வறிக்கை
டெல்லி: 2022ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாளை மத்திய பட்ஜெட் 2022ஐ மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டை முன்னிட்டு இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையில் இந்த நிதியாண்டின் ஜிடிபி 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Newest First Oldest First
பசுமை விமான நிலையம்
டெல்லியின் புறநகர் பகுதியான நொய்டாவில் பிரம்மாண்ட பசுமை விமான நிலையம் கட்டமைக்கப்படுகிறது என தனது உரையில் குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டெல்லி மும்பை விரைவுச்சாலை திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், நாடு முழுவதும் 23 பசுமை வழிச்சாலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார். ரயில்வே துறையை மேம்படுத்த புதிய அதிநவீன திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன என தனது உரையின் போது பேசிய குடியரசுத் தலைவர், தொழிலாளர் துறை, வங்கிகள் துறையிலும் புதிய சீர்திருத்தங்களை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது என்றார். நாட்டின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு அதி நவீன திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கான விதிமுறைகளை அரசு எளிதாக்கி உள்ளது என்றார்
குறைந்த விலையில் இண்டர்நெட்
கதர் மற்றும் ஊரக தொழில் துறை தயாரிப்புகளின் விற்பனை முன்பை விட பன்மடங்கு அதிகரித்துள்ளது என நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், இந்தியாவின் உற்பத்தி துறையானது மீண்டும் வேகமெடுத்து ஏராளமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது எனவும், உலக அளவில் மொபைல் போன் உற்பத்தி மையங்களில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது என்ரார். மேலும் பணமில்லா பரிவர்த்தனை டிஜிட்டல் பரிவர்த்தனை இந்திய வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றுகிறது எனவும், இந்தியாவில் இன்டர்நெட், ஸ்மார்ட் போன்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன என உரையாற்றினார்.
இந்தியாவில் 5ஜி சேவை

ஸ்டார்ட்-அப் திட்டங்கள் இந்தியாவில் முக்கிய பங்கு வகித்து வருகிறது என பேசிய குடியரசுத் தலைவர், ஸ்டார்ட்-அப் திட்டங்கள் மூலம் 6 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார். மேலும் தற்போது ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளதாகவும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்
My govt is also running PM Svanidhi Yojana to benefit the street vendors. So far 28 lakh street vendors have received monetary support worth over Rs 2900 crores. Govt is now connecting these vendors with online companies: President Ram Nath Kovind pic.twitter.com/muyRmvNTGR
— ANI (@ANI) January 31, 2022
சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக எனது அரசு பிரதமர் ஸ்வநிதி யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதுவரை 28 லட்சம் சாலையோர வியாபாரிகள் 2900 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி உதவியைப் பெற்றுள்ளனர்.
இந்த வியாபாரிகளின் விற்பனை பொருட்களை ஆன்லைன் நிறுவனங்களுடன் அரசு இப்போது இணைக்கிறது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
பேரிடர் ஏற்பட்ட போதெல்லாம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என பேசிய குடியரசு தலைவர், மத்திய அரசு அமைத்துள்ள உணவு தானிய சேமிப்புக் கிடங்குகளில் விவசாயிகளுக்கு பெரிய உதவி வழங்கப்பட்டு உள்ளதாகவும், சிறு விவசாயிகளுக்கு உதவ தான் மத்திய அரசு திட்டங்களின் நோக்கம் எனவும், சிறு தானியங்களை உற்பத்தி செய்வதற்காக மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது, இந்தியாவின் பாரம்பரியமான மழைநீர் சேகரிப்பு முறைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்
அம்பேத்கரின் எண்ணத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது

சமுதாயத்தில் அனைவரும் சமநிலையில் இருக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் எண்ணத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
நேரடி மானியம் மூலம் ஏழைகள் பணம் பெறுவதை மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது - குடியரசு தலைவர்.
கொரோனா கட்டுப்பாடுகளால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் விவசாயிகளுக்கு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
கடந்த ஒரு ஆண்டில் நாட்டின் மொத்த வேளாண் உற்பத்திப் பொருட்கள் 33 சதவீதம் உயர்ந்துள்ளது - குடியரசு தலைவர்
நாடாளுமன்றத்தில் திமுக ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு தலையிட்டு நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்..
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்..
நீட் தேர்வு குறித்து தமிழக ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக ஆர்ப்பாட்டம்
READ MORE
Comments
union budget 2022 budget 2022 ram nath kovind economic survey 2022 ராம்நாத் கோவிந்த் பட்ஜெட் 2022 பொருளாதார ஆய்வறிக்கை 2022
English summary
Economic Survey 2021-22 & President Ram Nath Kovind's Budget speech in Parliament LIVE News in Tamil (பொருளாதார ஆய்வறிக்கை 2021-22 & ஜனாபதி ராம்நாத் கோவிந்த் உரை): Check Live News Updates on President Ram Nath Kovind addresses to a joint sitting of the two Houses of Parliament ahead of budget 2022-23 and highlights of Economic Survey in tamil language.