டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நித்தியானந்தாவுக்கு நாங்கள் தஞ்சம் அளிக்கவில்லை.. அவர் எங்கள் நாட்டில் இல்லை.. ஈக்வடார் மறுப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    நித்தியானந்தா செய்யும் சேட்டைகள்... சிறைக்குள் அடைவது எப்போது?

    டெல்லி: சர்ச்சைக்குரிய சாமியாரும் பல வழக்குகளில் தேடப்படுபவருமான சாமியார் நித்தியானந்தாவுக்கு தங்களது நாடு அடைக்கலம் தரவில்லை; நித்தியானந்தாவின் அகதி கோரிக்கையை நிராகரித்துவிட்டோம் என ஈகுவடார் அரசு விளக்கம் அளித்துள்ளது.

    பலாத்கார வழக்கு, நில அபகரிப்பு, பெண் குழந்தைகள் கடத்தல், குழந்தைகளை வைத்து நிதி சேகரித்தல் என பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியவர் நித்தியானந்தா. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருகிறார்.

    வெளிநாடு தப்பி ஓட்டம்

    வெளிநாடு தப்பி ஓட்டம்

    நேபாளம் வழியாக போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார் நித்தியானந்தா. தற்போது தென் அமெரிக்கா கடற்பரப்பில் ஒரு தீவை வாங்கி அங்கே தனிநாடு அமைக்கப் போவதாக பிரகடனம் செய்து தேசதுரோக வழக்கையும் எதிர்கொள்ள இருக்கிறார் நித்தியானந்தா.

    ஈகுவடார் தூதரகம் விளக்கம்

    இந்நிலையில் டெல்லியில் உள்ள ஈகுவடார் தூதரகம் நேற்று நித்தியானந்தா குறித்து ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    நித்தி கோரிக்கை நிராகரிப்பு

    நித்தி கோரிக்கை நிராகரிப்பு

    ஈகுவடார் நாட்டிடம் நித்தியானந்தா சர்வதேச அளவிலான தனிநபர் பாதுகாப்புக்கான அதாவது அகதியாக அடைக்கலம் கோரி விண்ணப்பித்திருந்தார். அவரது வேண்டுகோளை ஈகுவடார் அரசு நிராகரித்துவிட்டது.

    ஹைதியில் நித்தி தஞ்சம்?

    ஹைதியில் நித்தி தஞ்சம்?

    இதனையடுத்து ஹைதிக்கு அவர் சென்றிருக்கலாம். பசிபிக் பெருங்கடலில் நித்தியானந்தா தீவுகளை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எந்த வகையிலும் ஈகுவடார் அரசு உதவி செய்யவில்லை.

    ஈகுவடார் அரசு வேண்டுகோள்

    ஈகுவடார் அரசு வேண்டுகோள்

    நித்தியானந்தா விவகாரத்தில் ஈகுவடார் நாட்டின் பெயரை ஊடகங்கள் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    English summary
    Ecuador Embassy in Delhi Said , it was rejected the self-styled godman Nithyananda's plea on asylum seeking.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X