டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிகாலை 3 மணிக்கு அதிரடி.. யெஸ் வங்கி நிறுவனர் ரானா கபூரை கைது செய்தது அமலாக்கத்துறை!

யெஸ் வங்கி நிறுவனர் ரானா கபூர், அமலாக்கத்துறை மூலம் இன்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

Google Oneindia Tamil News

டெல்லி: யெஸ் வங்கி நிறுவனர் ரானா கபூர், அமலாக்கத்துறை மூலம் இன்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

யெஸ் வங்கியின் மொத்த கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி கைப்பற்றியுள்ளது. வங்கியில் நிலவிய நிறைய முறையற்று செயல்பாடுகள், முறைகேடுகள் காரணமாக யெஸ் வங்கிக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ED arrests Yes Bank founder Rana Kapoor

அதிக அளவு கடன்களை அளித்தது, ஒரு கார்ப்ரேட் நிறுவனத்திற்கு பொய்யான கடன் வழங்கியது, வாரா கடன் அதிகம் இருந்தும் லோன்களை திரும்ப பெறாதது, ஆகியவை இந்த வங்கி நிர்வாகம் மீது வைக்கப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டு ஆகும்.

2003-ஆம் ஆண்டு ரானா கபூர் மற்றும் அசோக் கபூர் என்ற இருவரால் தொடங்கப்பட்டது தான் யெஸ் வங்கி. இந்த வங்கியின் வாராக் கடன்களின் அளவு 6 ஆயிரத்து 355 கோடி ரூபாயாக அதிகரித்து குறிப்பிடத்தக்கது. யெஸ் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக எடுக்க முடியாது.

இதனால் மக்கள் அதிகமாக கஷ்டப்பட்டு வருகிறார்கள். அடுத்த ஒரு மாதத்துக்கு எந்த ஒரு வாடிக்கையாளரும் இதைவிட அதிகமாக பணம் எடுக்க முடியாது.

இந்த நிலையில் இன்னொரு பக்கம் யெஸ் வங்கி நிறுவனர் ரானா கபூர், அமலாக்கத்துறை மூலம் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்தார். பணமோசடி, கருப்பு பணத்தை வெள்ளையாக்கியது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக ரானா கபூர் அமலாக்கத்துறை மூலம் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து விசாரிக்கப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை அமலாக்கத்துறை ரானா கபூரை கைது செய்தது. டெல்லியில் அவரின் வீட்டில் வைத்து ராணா கப்பூரை போலீசார் கைது செய்தனர். ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்கு பதிவு செய்து இருக்கிறது

English summary
ED arrests Yes Bank founder Rana Kapoor early in the morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X