டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துபாயில் உள்ள நிரவ் மோடியின் ரூ.56 கோடி சொத்துக்கள் முடக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாடு தப்பி ஓடிய நிரவ் மோடியின் ரூ.56 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த வைர வியாபாரியான நிரவ் மோடி, இவரது உறவினர் மெகுல் சோக்சி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றனர்.

ED attaches Nirav Modis assets worth Rs 56.8 crore in Dubai

[ரூ.600 கோடி ஐடிபிஐ வங்கி மோசடியில் சிவசங்கரன் வெளிநாடு தப்பியது எப்படி? வெளியான திடுக் தகவல் ]

இந்த வழக்கை சிபிஐ, அமலாக்கதுறையினர் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, நிரவ் மோடியை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, அமலாக்க துறை பலமுறை நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால் நோட்டீஸ் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. எனவே, மெகுல் சோக்சியை கைது செய்ய, இன்டர்போல் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதையடுத்து நிரவ் மோடி சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, துபாயில் நிரவ் மோடி மற்றும் அவரது குழு நிறுவனங்கள் என மொத்தம் 11 நிறுவனங்களின் ரூ.56.8 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

English summary
Nirav Modi's 11 properties in Dubai, worth Rs 56 crore, seized by enforcement directorate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X