டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ப.சிதம்பரம் முன் ஜாமீன் வழக்கு- ஆக.1 விசாரணையை ஒத்திவைக்க அமலாக்கப் பிரிவு வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் வழக்கு மீதான ஆகஸ்ட் 1-ந் தேதி விசாரணையை ஒத்திவைக்க அமலாக்கப்பிரிவு மனுத் தாக்கல் செய்துள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோர் மீது சிபிஐ, அமலாக்கப் பிரிவு வழக்குகள் தொடர்ந்துள்ளன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன..

ED seeks fresh date for hearing of Aircel-Maxis case

இவ்வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி இருவரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி ஓபி ஷைனி அவ்வப்போது இருவரையும் கைது செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மே மாதம் 30-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது இருவரையும் ஆகஸ்ட் 1-ந் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர்.

அதில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகஸ்ட் 1-ந் தேதியன்று வாதிட வாய்ப்பு இல்லாததால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்; ஆகஸ்ட் மாத இறுதியில் விசாரணைக்கான தேதியை நிர்ணயிக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

English summary
In Aircel Maxis case, Enforcement Directorate mentions adjournment of hearing in anticipatory bail application of P. Chidambaram as Solicitor General Tushar Mehta is not available to argue on August 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X