டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித்ஷா ஸ்பெஷல் டின்னர்.. எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட தமிழக கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    நியூஸ் 18 தமிழ்நாடு டிவியின் கருத்து கணிப்பிலும் மீண்டும் பாஜக ஆட்சி

    டெல்லி: இன்று டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷா வழங்கிய இரவு விருந்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

    லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி அதிக தொகுதிகளை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

    Edappadi palanisamy and other NDA leaders will participate in Amit Shah dinner

    இந்த நிலையில்தான் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு இன்று இரவு டெல்லியில் விருந்து அளித்தார் பாஜக தலைவர் அமித் ஷா. இதற்காக கொடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் டெல்லி சென்றனர்.

    விருந்துக்கு முன்பாக டெல்லியில் பாஜக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டமும் நடந்தது.மத்திய பாஜக அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். டெல்லி பாஜக அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடந்தது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆலோசனைக்கு தலைமை தாங்கினார்.

    இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்பின்பே அமித் ஷா தலைமையில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு டெல்லியில் விருந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

    அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்! அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்!

    டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் இந்த விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    English summary
    CM edappadi palanisamy and other NDA leaders from Tamilnadu will participate in BJP Chief Amit Shah special dinner on Delhi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X