டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 பேரின் ஈகோ.. இவர்கள் இருவரும் பேசினால்தான் கூட்டணி ஓகே ஆகும்.. கலக்கத்தில் 21 கட்சிகள்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் இடையே நிலவும் ஈகோ பிரச்சனை எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மாயாவதியை பார்க்க காத்திருக்கும் உயர் அதிகாரிகள்

    டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் இடையே நிலவும் ஈகோ பிரச்சனை எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    இரண்டு உறவுகளுக்கு இடையில் ஈகோ பிரச்சனை பெரிய முறிவை உண்டாக்கும். அதே ஈகோ பிரச்சனை இரண்டு அரசியல் தலைவர்களுக்கு இடையில் வந்தால் அது பெரிய கூட்டணி முறிவை ஏற்படுத்தும்.

    நாளை லோக்சபா தேர்தல் வெளியாக உள்ள நிலையில், இந்த ஈகோ பிரச்சனைதான் எதிர்கட்சிகளை பெரிய கலக்கத்தில் தள்ளி உள்ளது.

    கடும் மணல் தட்டுப்பாடு.. முடங்கிய கட்டுமான துறை.. 1 யூனிட் விலையை கேட்டு அதிரும் மக்கள் கடும் மணல் தட்டுப்பாடு.. முடங்கிய கட்டுமான துறை.. 1 யூனிட் விலையை கேட்டு அதிரும் மக்கள்

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    உத்தர பிரதேசத்தின் முக்கிய தலைவரான சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவிற்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. உத்தர பிரதேசத்தில் சென்ற ஆண்டு நடந்த லோக்சபா இடைத்தேர்தலில் தொடங்கிய பிரச்சனை இன்னும் தீராமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதுதான் தற்போது எதிர்கட்சிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    கடந்த 2018 மார்ச் மாதம் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற காரணத்தால் அவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இங்கு பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி, காங்கிரஸ் கட்சிகள் திட்டமிட்டது. ஆனால் கடைசியில் காங்கிரஸ் கூட்டணியில் இணைய முடியவில்லை.

    ஈகோ

    ஈகோ

    அப்போது அகிலேஷ் யாதவ் செய்த எந்த போன் காலையும் ராகுல் காந்தி அப்போது எடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியானது. இதனால் காங்கிரஸ் மீது கோபம் கொண்ட பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி இரண்டும் கூட்டணி வைத்து அங்கு போட்டியிட்டது. இவர்களுக்கு எதிராக காங்கிரஸ் வலுவான வேட்பாளர்களை நிறுத்தி வம்பிழுத்தது.

    வெற்றி பெற்றார்

    வெற்றி பெற்றார்

    இது அகிலேஷுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதிதான் அங்கு வெற்றி பெற்றது. இதே கோபத்தோடுதான் பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி இரண்டும் இந்த லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லை.

    இன்னும் தீரவில்லை

    இன்னும் தீரவில்லை

    இரண்டு தலைவர்களுக்கும் இடையில் தற்போதும் பிரச்சனை தீரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தலைவர் ராகுல் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் அப்போது செயல்பட்டார் என்று அகிலேஷ் ஒருமுறை நேரடியாக குறிப்பிட்டு இருந்தார். அப்போதில் இருந்து இப்போது வரை இவர்களுக்கு இடையில் உறவு நல்லபடியாக இல்லை. இதுதான் எதிர்கட்சிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

    ரொம்ப முக்கியம்

    ரொம்ப முக்கியம்

    லோக்சபா தேர்தலில் 21-22 கட்சிகள் ஒருமனதாக சேர்ந்து ஒரு பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் அதற்கு அகிலேஷ் மற்றும் ராகுல் காந்தி இருவரும் பேச வேண்டும். அப்படி பேசினால் மட்டுமே அனைவரும் ஒன்றாக சேர முடியும். இப்போது இவர்களுக்கு இடையில் பாலமாக ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார்.

    ஆனால் சர்ச்சை

    ஆனால் சர்ச்சை

    ஆனால் கூட்டணி என்று வந்துவிட்டால் இணைப்பு பால வேலை எல்லாம் சரிப்பட்டு வராது. இதனால், அகிலேஷ், ராகுலை பேச வைக்க கட்சிகள் முடிவெடுத்து இருக்கிறது. மே 24ம் தேதி எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து கூட்டம் நடத்த உள்ளது. இதில் இவர்கள் எல்லோரும் இந்த ஈகோ பிரச்னையை பேசி தீர்ப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    English summary
    Ego clash between Rahul Gandhi and Akhilesh Yadav may give a shock to opponents.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X