டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக்டவுனால் நாட்டின் 8 முக்கிய தொழில் துறைகளின் உற்பத்தி மிகக் கடுமையான வீழ்ச்சி

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட லாக்டவுன் காரணமாக மே மாதத்தில் எட்டு முக்கிய உள்கட்டமைப்பு தொழில்களின் உற்பத்தி 23.4 சதவீதம் சரிந்தது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் முன்னதாக முக்கியமான எட்டு துறைகளின் வளர்ச்சி 2019 மே மாதத்தில் 3.8 சதவீதம் அதிகரித்து இருந்தது. ஆனால் இப்போது 23.4 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது என வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் குறிப்பிட்டு இருந்தது.

 eight core infrastructure industries shrank by 23.4 per cent in May due to the lockdown

உரத்தைத் தவிர்த்து, நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், எஃகு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய ஏழு துறைகளும் மே மாதத்தில் எதிர்மறையான வளர்ச்சியை இந்த லாக்டவுனில் பதிவு செய்துள்ளன.

ஏப்ரல்-மே 2020-21 காலப்பகுதியில், இந்த எட்டு துறைகளின் உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளது, ஆனால் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 4.5 சதவீதம் தான் குறைந்து இருந்தது.

இந்த முறை நீண்ட நெடிய உரையில்லை... 16 நிமிடம் மட்டுமே பேசிய பிரதமர் மோடிஇந்த முறை நீண்ட நெடிய உரையில்லை... 16 நிமிடம் மட்டுமே பேசிய பிரதமர் மோடி

கோவிட் -19 தொற்றுநோயால் 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடு தழுவிய லாக்டவுனால் நிலக்கரி, சிமென்ட், எஃகு, இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு நிலையம், கச்சா எண்ணெய் போன்ற பல்வேறு தொழில்கள் கணிசமான உற்பத்தி இழப்பை சந்தித்தன" என்று மத்திய அரசு ம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் (ஐஐபி) உரம், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், எஃகு, சிமென்ட் மற்றும் மின்சாரம் எட்டு தொழில்கள் 40.27 சதவீதமாக உள்ளன.

English summary
The output of eight core infrastructure industries shrank by 23.4 per cent in May due to the coronavirus-induced lockdown, according to the official data.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X