டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது அவமானம்.. ப.சிதம்பரம் ஆவேசம்

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தல் ஆணையம் முழுமையாக சரணடைந்துவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று இறுதிகட்ட லோக்சபா, வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதை பாருங்கள்:

 Election Commission completely surrendered its independence: P.Chidambaram

வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களில் பிரதமரின் 'புனித யாத்திரை' என்பது, மதம் மற்றும் மத அடையாளங்களை வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பயன்படுத்தினார் என்று நாம் இப்போது சொல்லலாம்.

தேர்தல் ஆணையம் தூங்குகிறது என்பது எங்கள் குற்றச்சாட்டாக இருந்தது. இப்பொழுது, நாம் மேலும் கூடுதலாகவே குற்றம்சாட்ட முடியும். தேர்தல் ஆணையம் தனது முழு சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் ஒப்படைத்துவிட்டு, சரணடைந்ததாக சொல்ல முடியும். அவமானம்!

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத் உள்ளிட்ட இந்து ஆன்மீக தலங்களுக்கு கடந்த இரு தினங்களாக சென்று, அந்த புகைப்படங்களை மீடியாக்கள் வெளியிட்ட நிலையில், இந்த குற்றச்சாட்டை ப.சிதம்பரம் முன் வைத்துள்ளார்.

English summary
Our charge had been that the EC was sleeping on the job. Now, we can go further and say that the EC completely surrendered its independence and authority. Shame!, says P.Chidambaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X