டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் இல்லை... மற்ற மாநிலங்களில் 56 தொகுதிகளுக்கு தேர்தல்!

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் காலியாக இருக்கும் திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தற்போது இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், மற்ற மாநிலங்களில் காலியாக இருக்கும் மொத்தம் 56 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

தேர்தல் நடத்துவதில் தற்போது சிக்கல் இருப்பதாக பல்வேறு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையரிடம் இருந்து மத்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா- பாஜக- ஈபிஎஸ்.... மாறி மாறி உள்ளே வெளியே... மங்காத்தா ஆடும் ஓபிஎஸ்! சசிகலா- பாஜக- ஈபிஎஸ்.... மாறி மாறி உள்ளே வெளியே... மங்காத்தா ஆடும் ஓபிஎஸ்!

லோக்சபா

லோக்சபா

தமிழகம் மட்டுமின்றி, அசாம், கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் காலியாக இருக்கும் சட்டசபை மற்றும் லோக் சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப் போவதில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜெ.அன்பழகன்

ஜெ.அன்பழகன்

திமுக எம்எல்ஏக்களாக இருந்த கே.பி.பி.சாமி, காத்தவராயன், ஜெ.அன்பழகன் ஆகியோரின் மறைவால் திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.

குடியாத்தம்

குடியாத்தம்

ஒரு தொகுதி காலியானால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும். இதன்படி, திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளில் ஆகஸ்ட் இறுதிக்குள் தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும்.

செப்டம்பர்

செப்டம்பர்

இதுகுறித்து கடந்த ஜூலை மாத இறுதியில் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறுகையில், ''தமிழகத்தில் செப்டம்பர் 7 ஆம் தேதி வரை இடைத்தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய 2 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்வது போன்ற பணிகள் தொடங்கிவிட்டன. செப்டம்பர் 7ஆம் தேதிக்குப் பின்னர் எப்போது தேர்தல் தேதியை அறிவித்தாலும் நடத்த தயாராக இருக்கிறோம்'' என்று தெரிவித்து இருந்தார்.

மத்தியப்பிரதேசம்

மத்தியப்பிரதேசம்

அதேசமயம் மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு, குஜராத்தில் 8 தொகுதிகளுக்கு, உத்தரப்பிரதேசத்தில் 7 தொகுதிகளுக்கு, ஜார்கண்ட், நாகலாந்து, கர்நாடகா, மணிப்பூர், நாகலாந்து, ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு தொகுதிகளிலும் நவம்பர் 3ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. முடிவுகள் பீகார் தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து நவம்பர் 10ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

English summary
Election Commission decided not to announce by-elections at this stage in Assam, Kerala, Tamil Nadu & West Bengal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X