டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

208 பொருட்களுக்கான செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Google Oneindia Tamil News

Recommended Video

    செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

    டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவு பட்டியலை தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்தது.

    நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என்றாலே அங்கு பணம் விளையாடும். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது குற்றம் என்பதால் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

     Election Commission fixes election expenditure

    <strong>DMK vs AIADMK:</strong> திமுக vs அதிமுக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள் DMK vs AIADMK: திமுக vs அதிமுக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள்

    அதன்படி ஒவ்வொரு வேட்பாளரும் தாங்கள் செய்யும் செலவு கணக்கை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அந்த கணக்கு தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்யப்பட்ட வரையறைக்குள் இருக்க வேண்டும்.

    [39 தொகுதிகளும் நுனி விரலில்.. ஒன்இந்தியா தமிழில்]

    அதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தலா ரூ. 70 லட்சம் மட்டுமே செலவிட வேண்டும். அது போல் சட்டசபை தொகுதி வேட்பாளர்கள் தலா ரூ 28 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும்.

    அது போல் 208 பொருட்களுக்கான விலை பட்டியலை தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன் பட்டியல் பின்வருமாறு:

    • மட்டன் பிரியாணி- ரூ. 200
    • சிக்கன் பிரியாணி- ரூ 180
    • காலை டிபன் - ரூ. 100
    • வெஜ் பிரியாணி- ரூ 100
    • மதிய உணவு- ரூ 100
    • கூல்டிரிங்ஸ்- ரூ 75
    • தண்ணீர் பாட்டில்கள்- ரூ. 20
    • பூ- ரூ 60
    • புடவை- ரூ. 200
    • டி சர்ட் - ரூ.175
    • தொப்பி -ரூ. 20
    • பூசணிக்காய் - ரூ. 120
    • வாழைமரம்- ரூ.700
    • இளநீர் ரூ.40
    • பொன்னாடை - ரூ 150
    • வாகன ஓட்டுநர்களுக்கு 8 மணி நேரத்துக்கு- ரூ. 695
    • மேளம், பேண்ட் வாத்தியங்கள் 4 மணி நேரத்துக்கு- ரூ 4500 வரை
    • மண்டபங்களில் வாடகை கட்டணம் 4 மணி நேரத்துக்கு- ரூ. 2000 முதல் ரூ .6000 வரை
    • 5 ஸ்டார் ஹோட்டலில் ஏசி அறை செலவு- ரூ 9300
    • 3 ஸ்டார் ஹோட்டலில் ஏசி அறை செலவு- ரூ 5800

    தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்த செலவுக்குள் நடத்தப்படுகிறதா என்பதை பார்க்க செலவின பார்வையாளர்கள் கண்காணிப்பர்.

    English summary
    Election commission fixes election expenditure for each and every candidate who contest in Loksabha elections and Tamilnadu assembly byelections 2019.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X