டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அபிநந்தன் குறித்து பிரச்சாரம் செய்த மோடி.. எந்த தப்பும் இல்லையே.. தேர்தல் ஆணையம் தீர்ப்பு!

பிரதமர் மோடி இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் குறித்து பிரச்சாரத்தில் பேசியது தேர்தல் விதிமுறை மீறல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் குறித்து பிரச்சாரத்தில் பேசியது தேர்தல் விதிமுறை மீறல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக தொடுக்கப்பட்ட புகார்களில் வரிசையாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. திங்கள் கிழமைக்குள் இதில் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் தேர்தல் ஆணையம் வேகமாக மோடிக்கு எதிரான புகார்கள் மீது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறை மீறல் செய்ததாக புகார் உள்ளது. இவர்கள் இருவரும் மீதும் 6க்கும் மேற்பட்ட புகார்கள் உள்ளது.

பெரும்பான்மை சமூகங்கள் கடும் அதிருப்தி: கிழக்கு உ.பி.யில் பெரும் பின்னடைவை சந்திக்கப் போகிறது பாஜக?பெரும்பான்மை சமூகங்கள் கடும் அதிருப்தி: கிழக்கு உ.பி.யில் பெரும் பின்னடைவை சந்திக்கப் போகிறது பாஜக?

 5 வழக்குகள் தீர்ப்பு

5 வழக்குகள் தீர்ப்பு

இதில் 5 வழக்குகள் மீது ஏற்கனவே தேர்தல் ஆணையம் முடிவெடுத்து இருக்கிறது. இன்னும் சில புகார்களின் மீது தேர்தல் ஆணையம் இன்று நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை எந்த புகாரிலும் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன

என்ன

அதன்படி நேற்று பிரதமர் மோடி இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் குறித்து பிரச்சாரத்தில் பேசியது தேர்தல் விதிமுறை மீறல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது 6 வது புகார் ஆகும். பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள பதன் பகுதியில் பிரச்சாரம் செய்த போது பாகிஸ்தானுக்கு எதிராக பேசினார்.

என்ன பேசினார்

என்ன பேசினார்

அதில், பாகிஸ்தானை நான் கடுமையாக எச்சரித்து இருந்தேன். அபிநந்தன் அங்கு சிறை பிடிக்கப்பட்டு இருந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு நான் எச்சரிக்கை விடுத்தேன். அபிநந்தனை விடுக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறினேன். அதனால்தான் அவர் விடுவிக்கப்பட்டார் என்று மோடி பேசி இருந்தார்.

தவறு இல்லை

தவறு இல்லை

இதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ராணுவம் குறித்தும், ராணுவ அதிகாரிகள் குறித்தும் பிரச்சாரத்தில் பேச கூடாது என்று விதி இருக்கிறது. ஆனால் மோடி அதை மீறி தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில்தான் மோடி எந்த தவறும் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

English summary
Election Commission gave another Clean Chit To PM Modi in Abhinandhan speech in Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X