டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓட்டுப் பதிவு இயந்திரம் குறித்து பொய் புகார் கூறும் வாக்காளர்கள் மீது நடவடிக்கை.. சுனில் அரோரா

Google Oneindia Tamil News

டெல்லி: வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து பொய் புகார் கூறும் வாக்காளரை தண்டிக்கும் சர்ச்சைக்குரிய விதிமுறை மறுபரிசீலனை செய்யப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

தேர்தலின்போது தங்களது வாக்குகள் தவறாக பதிவாகிவிட்டதாகவும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது வாக்காளர்கள் சிலர் புகார் கூறி வருகின்றனர். அப்படி புகார் கூறும் வாக்காளர் தேர்தல் நடத்தை விதிகள் 49 எம்ஏ பிரிவின் படி சோதனை ஓட்டு போட அனுமதிக்கப்படுவார்.

Election Commission may modify the penal provisions for false claims

ஒருவேளை அவர் கூறியது பொய் என்று கண்டுபிடிக்கப்பட்டால் இந்திய தண்டனை சட்டம் 177ஆவது பிரிவின்படி அவர் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம்.

 பாரீர் பாரீர்.. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கட்டாயம்.. லிஸ்ட் வெளியிட்ட எச். ராஜா! பாரீர் பாரீர்.. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கட்டாயம்.. லிஸ்ட் வெளியிட்ட எச். ராஜா!

சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்த தண்டனை அறிவிக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இந்த விதிமுறை மறுபரிசீலனை செய்யப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று தெரிவித்தார். தேர்தல் முடிந்து விட்டதால் அந்த விதிமுறையை மாற்றி அமைப்பதா? தளர்த்துவதா? என்பதை ஆலோசித்து முடிவு எடுப்போம் என்று சுனில் அரோரா தெரிவித்தார்.

English summary
Election Commission may modify the penal provisions for false claims, says Chief Election Commissioner Sunil Arora.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X