டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தப்படுகிறதா? சர்ச்சைகளுக்கு தேர்தல் ஆணையம் பதில்

Google Oneindia Tamil News

டெல்லி: வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடத்தப்படுவதாக வெளியாகும் வீடியோக்களில் அடிப்படை ஆதாரம் இல்லை என்று, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடத்தப்படுவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

Election Commission says EVMs swap is baseless

இந்த நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடத்தப்பட வாய்ப்பே இல்லை என மறுத்துள்ளது தேர்தல் ஆணையம். வாக்குப் பதிவு இயந்திரங்கள் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடைபெற்றதுமே, வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் சீல் செய்யப்படுகிறது. அதுவும், அனைத்து வேட்பாளர்கள் முன்பாகத்தான் இந்த பணி வீடியோ பதிவோடு நடக்கும்.

லட்டு மோடி எங்கே.. ஜாங்கிரி மோடியை எங்கப்பா காணோம்.. கலகலக்கும் மும்பை ஸ்வீட் கடை! லட்டு மோடி எங்கே.. ஜாங்கிரி மோடியை எங்கப்பா காணோம்.. கலகலக்கும் மும்பை ஸ்வீட் கடை!

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. வெளியே, சிபிஏஎப் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளனர். ஒவ்வொரு வேட்பாளருக்கும், தலா ஒரு பிரமுகர், பிரதிநிதியாக அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். எனவே, வாக்குப் பதிவு இயந்திரங்களை மாற்றுகிறார்கள் என்பது அடிப்படையில்லாத குற்றச்சாட்டு. இவ்வாறு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

English summary
Election Commission Dismisses Questions on Unsecure Movement of EVMs in Uttar Pradesh, and says it is Baseless.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X