டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதெல்லாம் மனிதர்கள் போட்ட ஓட்டுங்க.. பேய்கள் ஓட்டு போடலை.. தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலில் பேய்கள் ஓட்டு போடவில்லை. ஓட்டு போட்டவர்கள் எல்லாம் மனிதர்கள்தான் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக அமோகமாக வெற்றி பெற்றது.

ஆனால் எதிர்க்கட்சிகளோ இது முழுக்க முழுக்க பாஜகவின் தில்லுமுல்லு என தெரிவித்தது. இதற்கு முன்னதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளிலும் பாஜக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டது. வாக்கு பதிவு இயந்திரங்களில் ஏதோ முறைகேடு நிகழ்த்த பாஜக திட்டமிட்டுள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் இந்தியை திணித்தால் காங்கிரஸ் கதிதான்... பாஜகவுக்கு அதிமுக எச்சரிக்கை! தமிழகத்தில் இந்தியை திணித்தால் காங்கிரஸ் கதிதான்... பாஜகவுக்கு அதிமுக எச்சரிக்கை!

ஊடகங்கள்

ஊடகங்கள்

இந்த நிலையில் பதிவான மொத்த வாக்குகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கு ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன என ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. அதாவது இந்தியா முழுவதும் பதிவான வாக்குகளை காட்டிலும் வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலமாக எண்ணப்பட்ட வாக்குகள் குறைவாக இருப்பதாக ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டன.

இறுதியான தகவல்

இறுதியான தகவல்

இது போன்று 373 லோக்சபா தொகுதிகளில் மேற்கண்ட தகவல்கள் சமமாக இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறுகையில் வாக்குப் பதிவு குறித்த தகவல்கள் உத்தேசமாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அது இறுதியான தகவல் கிடையாது.

தாமதமாகும்

தாமதமாகும்

இதுபோல் உத்தேசமான தகவல்களை கொடுக்கும் போது இறுதி அவுட்புட்டில் சில மாறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் கூட சரியான தரவுகளை கூற இரண்டு முதல் 3 மாதங்கள் ஆயிற்று.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்து மனிதர்கள் செலுத்தியது. பேய்கள் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

English summary
Election Commission says that Ghosts didnt vote in Loksabha election, They were all humans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X