டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மொதல்ல சொன்னோம்ல.. அதே மாதிரிதான் வாக்கு எண்ணுவோம்.. மாற்றமில்லை.. தேர்தல் ஆணையம்

அறிவித்தபடி மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections Results 2019: தேர்தல் முடிவுகள் உங்க தொகுதியில் எத்தனை சுற்றில் முடிவு தெரியும்?

    டெல்லி: மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிகைகளில் குளறுபடி ஏற்பட்டால் முதலில் விவிபாட் ஒப்புகை சீட்டுகள் அனைத்தையும் எண்ண வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. மேலும் ஏற்கெனவே அறிவித்தபடி மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

    தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, 22 எதிர்க்கட்சிகளின் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்தார்.

    அதில், வாக்கு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை சரிபார்ப்பது ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 5 வாக்குப்பதிவு மையங்கள் எனும் விஷயத்தை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    மின்னணு வாக்கு பதிவு

    மின்னணு வாக்கு பதிவு

    சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகள் தலைவர்கள் திரண்டு தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திப்பது என்றும் முடிவானது. சந்திப்பின்போது, விவிபாட் ஸ்லிப், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் சரியான எண்ணிக்கையில் பொருந்துகிறதா என்பதை பார்க்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் முடிவு செய்யப்பட்டது.

    வாக்குப்பதிவு எந்திரம்

    வாக்குப்பதிவு எந்திரம்

    அதன்படி, 22 எதிர்கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். வாக்கு எண்ண ஆரம்பிக்கும்போதே, விவிபாட் இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும், வாக்குபதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும் சோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    வலியுறுத்தல்

    வலியுறுத்தல்

    மேலும் வாக்கு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பதிவானவற்றுடன் 50 சதவீதம் அளவில் சரிபார்க்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளை வலியுறுத்தினர்.

    மாற்றம் இல்லை

    மாற்றம் இல்லை

    ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற கூடிய நடைமுறையில் எந்தஒரு மாற்றமும் இல்லை என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறிவிட்டது.

    English summary
    The Election Commission has announced thatthere is no change in the vote count mode. Furthermore, the opposition's demands have been rejected
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X