டெல்லி: தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும்; வாக்கு எண்ணிக்கை மே 2-ந் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
#BREAKING தமிழகம், புதுவையில் ஏப்ரல் 6ல் சட்டசபைத் தேர்தல்!
வங்கி கணக்குகள், சந்தேகத்துக்குரிய பணபரிமாற்றம் குறித்து கண்காணிக்கப்படும்
6:06 PM, 26 Feb
தமிழகத்தில் 6,000 வாக்கு சாவடிகள் பதற்றமானவை- சத்யபிரத சாகு
6:05 PM, 26 Feb
தமிழகத்தில் 88,936 வாக்கு சாவடிகள் - சத்யபிரத சாகு
6:05 PM, 26 Feb
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன - சத்யபிரத சாகு
6:05 PM, 26 Feb
சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேட்டி
5:35 PM, 26 Feb
அஸ்ஸாம்- 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல்.
முதல் கட்ட வாக்குப் பதிவு மார்ச் 27.
2-ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 1.
3-ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 6.
5:34 PM, 26 Feb
8 கட்டங்களாக மேற்கு வங்க சட்டசபை தேர்தல்:
முதல் கட்ட வாக்குப் பதிவு- மார்ச் 27,
2-ம் கட்ட வாக்குப் பதிவு- ஏப்ரல் 1,
3-ம் கட்ட வாக்குப் பதிவு- ஏப்ரல் 6,
4-ம் கட்ட வாக்குப் பதிவு- ஏப்ரல் 10,
5-ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 17,
6-ம் கட்ட வாக்குப் பதிவு- ஏப்ரல் 22,
7-ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 26,
8-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29;
5:31 PM, 26 Feb
மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல்
5:30 PM, 26 Feb
கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு ஏப்ரல் 6ம் தேதி இடைத் தேர்தல்
5:29 PM, 26 Feb
கேரளாவில் மார்ச் 12-ல் வேட்பு மனு தாக்கல்;
வேட்பு மனுக்கள் பரிசீலனை - மார்ச் 20;
வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க கடைசி நாள் - மார்ச் 22;
வாக்குப் பதிவு நாள்- ஏப்ரல் 6;
வாக்கு எண்ணிக்கை- மே 2.
5:28 PM, 26 Feb
புதுச்சேரியில் மார்ச் 12-ல் வேட்பு மனு தாக்கல்;
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - மார்ச் 19;
வேட்பு மனுக்கள் பரிசீலனை - மார்ச் 20;
வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க கடைசி நாள் - மார்ச் 22;
வாக்குப் பதிவு நாள்- ஏப்ரல் 6;
வாக்கு எண்ணிக்கை- மே 2.
5:27 PM, 26 Feb
தமிழகத்தில் மார்ச் 12-ல் வேட்பு மனு தாக்கல்;
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - மார்ச் 19;
வேட்பு மனுக்கள் பரிசீலனை - மார்ச் 20;
வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க கடைசி நாள் - மார்ச் 22;
வாக்குப் பதிவு நாள்- ஏப்ரல் 6;
வாக்கு எண்ணிக்கை- மே 2.
5:24 PM, 26 Feb
புதுச்சேரியில் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல்
5:22 PM, 26 Feb
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும்
5:21 PM, 26 Feb
கேரளாவில் ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்
5:20 PM, 26 Feb
அஸ்ஸாமில் முதல் கட்டமாக மார்ச் 27-ந் தேதி நடைபெறும்
5:19 PM, 26 Feb
தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறும்
5:16 PM, 26 Feb
அஸ்ஸாம் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும்
5:15 PM, 26 Feb
புதுச்சேரியில் வேட்பாளர் செலவினம் அதிகபட்சம் ரூ22 லட்சம்
5:15 PM, 26 Feb
வேலூர், ஆர்.கே.நகர் தேர்தல்களில் அதிக பணப்பட்டுவாடா இருந்தது- சுனில் அரோரா
5:13 PM, 26 Feb
பணப்பட்டுவாடாவை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு 2 செலவின பார்வையாளர்கள்
5:12 PM, 26 Feb
புதுச்சேரி தவிர இதர மாநிலங்களில் வேட்பாளர்கள் அதிக பட்ச செலவு 38 லட்சம்
5:12 PM, 26 Feb
தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம்
5:12 PM, 26 Feb
வாக்கு சாவடிகளில் முக கவசங்கள் வழங்கப்படும்
5:10 PM, 26 Feb
குற்றப் பின்னணி வேட்பாளர்கள் அது பற்றிய விவரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும் -சுனில் அரோரா
READ MORE
4:38 PM, 26 Feb
தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு
4:39 PM, 26 Feb
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் சட்டசபைகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது
4:39 PM, 26 Feb
தமிழகத்தில் மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளனர்
4:41 PM, 26 Feb
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்திக்க வருகை
4:41 PM, 26 Feb
சுனில் அரோராவுடன் தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்
4:41 PM, 26 Feb
தமிழகம், புதுவை சட்டசபை தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட உள்ளது
4:41 PM, 26 Feb
தமிழகம், புதுவை உட்பட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன
4:41 PM, 26 Feb
கொரோனா காலம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் தேர்தல் நடத்துகிறோம் - சுனில் அரோரா