டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2019ல் மோடி, அமித் ஷாவை பகைத்துக் கொண்ட லவாசா... ஆசியன் வங்கிக்கு செல்கிறார்!!

Google Oneindia Tamil News

டெல்லி: பிலிபைன்சில் இருக்கும் ஆசியன் டெவலப்மென்ட் வங்கியின் துணைத் தலைவராக இந்திய தேர்தல் கமிஷனர் அசோக் லவாசா பொறுப்பேற்க இருக்கிறார். இவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பதவிக்காலம் இருக்கும் நிலையில் புதிய பொறுப்புக்கு செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருப்பவர் அசோக் லவாசா. இவருக்கு வரும் 2022 வரை பதவிக் காலம் இருக்கிறது. இந்த நிலையில் இவர் ஆசியன் டிவலப்மென்ட் வங்கியின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது. இவரது தலைமையில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்கவிருந்த நிலையில், இவர் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Election commissioner Ashok Lavasa will be joining Asian Development Bank Vice President

பதவியில் இருக்கும்போது ராஜினாமா செய்யும் தேர்தல் கமிஷனர்களில் இரண்டாம் நபர் இவர். இவருக்கு அடுத்தது இந்தப் பொறுப்புக்கு சுஷில் சந்திரா வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லவாசாவுக்கு முன்னதாக 1973ல் தேர்தல் கமிஷனராக இருந்த நாகேந்தர் சிங் தனது பதவிக்காலம் முடியும் முன்னர் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பொறுப்பேற்பதற்காக ராஜினாமா செய்து இருந்தார்.

ஆசியன் டிவலப்மென்ட் வங்கியின் துணைத் தலைவர் பொறுப்பேற்பதற்காக லவாசா தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஆசியன் டிவலப்மென்ட் வங்கியின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள். மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு பதவிக் காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம். இந்த வங்கியில் தலைவருக்கு கீழே ஆறு துணைத் தலைவர்கள் இருப்பார்கள். திவாகர் குப்தா வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுகிறார். அந்த இடத்தைத்தான் லவாசா நிரப்ப இருக்கிறார்.

2019ஆம் ஆண்டு தேர்தலின்போது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவர் மீதும் தேர்தல் நன்னடத்தை மீறல் தொடர்பாக வந்த குற்றச்சாட்டில் இருந்து கிளீன் சிட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் சர்ச்சைக்குள்ளானார். தேர்தல் முடிந்த பின்னர் இவரது குடும்பத்தினருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இவரது மனைவி, மகன், சகோதரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இவர்கள் தங்களது மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய டுவிஸ்ட்... ஈரானின் சபாஹர் ரயில் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்.. இந்தியா அதிரடி புதிய டுவிஸ்ட்... ஈரானின் சபாஹர் ரயில் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்.. இந்தியா அதிரடி

2018, ஜனவரி 23 ஆம் தேதி தேர்தல் கமிஷனராக லவாசா பொறுப்பேற்று இருந்தார். அரியானா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நிதித்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2001-02 ஆம் ஆண்டுகளில் பொருளாதார விவகாரத்துறையில் இணை செயலாளராக ஆசியன் டிவலப்மென்ட் வங்கிக்கு பணியாற்றியுள்ளார்.

English summary
Election commissioner Ashok Lavasa will be joining Asian Development Bank Vice President
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X