டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாநிலங்களவை தேர்தலை உடனடியாக நடத்துங்கள்.. தேர்தல் ஆணையம் தாமதம் செய்வது ஏன்.. டி ஆர் பாலு கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 3 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தார்.

அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக இருந்த முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

Election for Tamilnadus 3 Rajya Sabha MP seats needs to be conducted immediately dmk mp TR Balu

அதேபோல நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் வைத்தியலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும், கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இதையடுத்து அவர்கள் தங்கள் மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்தனர். இத்துடன் சேர்த்து தமிழ்நாட்டிற்கான மொத்தம் மூன்று ராஜ்யசபா எம்பி பதவிகள் காலியானது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 3 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு தேர்தல் ஆணையத்திடம் இன்று மனு அளித்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சட்டப்படி இதை casual vaccine என கூறுவார்கள். இந்த மூன்று எம்பி பதவிகளை நிரம்ப தனித்தனியாக அறிவிப்பாணையை வெளியிட்டுத் தேர்தலை நடத்த வேண்டும். மாநிலங்களவை தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் தாமதிப்பது ஏன்?

ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்

இதை வலியுறுத்தித் தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் வலியுறுத்தியுள்ளோம். கடந்த காலங்களில் அமித் ஷா, ஸ்மிருதி இராணி ஆகியோர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர்கள் மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்தனர். அப்போது இப்படி தான் தேர்தல் நடத்தப்பட்டது. கொரோனா பரவலைக் காரணம் காட்டி இந்தத் தேர்தலைத் தள்ளி வைக்கக் கூடாது" என்று அவர் தெரிவித்தார்.

English summary
DMK MP TR Balu petitioned the election commission, Election for 3 Rajya Sabha MP seats must be conducted immediately, says TR Balu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X