டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தல் நிதி பத்திரமே முறைகேடுதான்.. பாஜக பல கோடி ஊழல் செய்துள்ளது.. லோக்சபாவில் காங். அமளி!

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜக கட்சி மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது, கருப்பு பணத்தை முறைகேடாக வெள்ளையாக மாற்றியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் நிதி பத்திரங்கள் என்றால் என்ன? சர்ச்சைக்கான காரணம் என்ன ?

    டெல்லி: தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜக கட்சி மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது, கருப்பு பணத்தை முறைகேடாக வெள்ளையாக மாற்றியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இந்த பிரச்சனையை காங்கிரஸ் கட்சி இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பியது.

    எலக்ட்ரல் பாண்ட் (Electoral Bonds) எனப்படும் தேர்தல் நிதி பத்திர சர்ச்சையை தற்போது பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. தேர்தல் நிதி பத்திரம் மூலம் வங்கிகளில் கட்சிகளின் கணக்குகளில் நிதியாக செலுத்த முடியும்.இந்திய குடிமகனோ அல்லது இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிறுவனமோ இந்த பாத்திரங்களை வாங்கி, அதன் மூலம் அரசியல் கட்சிக்கு பணம் தர முடியும்.

    இதில் நிதியை பெற்ற கட்சிக்கே தங்களுக்கு யார் நிதி வழங்கினார்கள் என்பது தெரியாது.நிதி அளிப்பவரின் விவரம் வங்கிகளால் ரகசியமாக வைத்திருக்கப்படும். இதனால் இந்த திட்டம் பெரிய விமர்சனங்களை சந்தித்தது.

    பிரச்சனை பெரிதானது

    பிரச்சனை பெரிதானது

    இந்த நிலையில் இந்த தேர்தல் நிதி பத்திர விவகாரத்தை காங்கிரஸ் கட்சி லோக்சபா மற்றும் ராஜ்ய சபா இரண்டிலும் எழுப்பியது. காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து திமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்த தேர்தல் நிதி பத்திர பிரச்சனையை குறித்து பேசி அமளியில் ஈடுபட்டது. காங்கிரஸ் தொடர்பாக பேசி மனிஷ் திவாரி, தேர்தல் நிதி பத்திரம் என்பது பாஜகவின் நலனுக்காக கொண்டு வரப்பட்டது.

    கோபமும்

    கோபமும்

    இதன் மூலம் பாஜக பல கோடி நிதிகளை முறைகேடாக பெற்று இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பாஜக முறைகேடாக பணம் பெற்றுள்ளது. அதேபோல் மாநில தேர்தலில் தேர்தல் நிதி பத்திரத்தை பயன்படுத்த பாஜக ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. பிரதமர் மோடி நேரடியாக இதில் அழுத்தம் கொடுத்துள்ளார்.

    ஆர்டிஐ எப்படி

    ஆர்டிஐ எப்படி

    இது ஆர்டிஐ மூலம் தெரிய வந்து இருக்கிறது. யார் யாரோ மறைமுகமாக பாஜகவிற்கு பணம் கொடுத்துள்ளனர் என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் லோக்சபா தலைவர் ஆதிர் ரஞ்சன் ஜோதி, இந்த தேர்தல் நிதி பத்திரங்கள் பற்றி உடனடியாக விசாரிக்க வேண்டும். இவை எல்லாம் ஊழல்கள்.

    தலையீடு உள்ளது

    தலையீடு உள்ளது

    இதில் நிறைய கார்ப்ரேட் நிறுவனங்களின் தலையீடு இருக்கிறது. அரசு இந்த விவரங்களை மொத்தமாக வெளியிட வேண்டும். இது அதிகாரபூர்வ அரசியல் லஞ்சம். கருப்பு பணத்தை வெள்ளையாக்க வேண்டும் செய்ய அரசு கொண்டு வந்த கொள்ளை நோக்கம் கொண்ட திட்டம் இது என்று குறிப்பிட்டார்.

    சசி தரூர் என்ன சொன்னார்

    சசி தரூர் என்ன சொன்னார்

    இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்பி சசி தரூர், முறைகேடு செய்ய வேண்டும். பணம் பெற வேண்டும் என்பதற்காகவே தேர்தல் நிதி பத்திரங்களை பாஜக கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பெரிய கார்ப்ரேட் நிறுவனங்கள் காட்சிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, ஆட்சியை கட்டுப்படுத்தி வருகிறது, என்று குறிப்பிட்டார்.

    என்ன பதில்

    என்ன பதில்

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக கட்சியின் சபாநாயகர் ஓம் பிர்லா, அவையில் காங்கிரஸ் கட்சியினர் எல்லை மீறி நடந்து கொள்கிறார்கள். அவர்கள் நாகரீகமாக பேச வேண்டும். இந்த தேர்தல் நிதி பத்திர விவகாரத்தை வேண்டும் என்று எழுப்பி பிரச்சனை செய்து வருகிறார்கள், என்று குறிப்பிட்டார்.

    English summary
    Electoral Bonds are Scam: BJP did political bribes says Congress in Lok Sabha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X