டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர் நியூஸ்.. எலக்ட்ரிக் கார், பைக் வாங்குவோருக்கு ஜாக்பாட்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Electric Vehicles: எலக்ட்ரிக் கார், பைக் வாங்குவோருக்கு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு- வீடியோ

    டெல்லி: எலக்ட்ரிக் வாகனங்களுக்கு, சாலை வரி மற்றும் வாகன பதிவு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று, மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    வரி விலக்கு உத்தரவு, அனைத்து வகையான எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் பொருந்தும் என்று, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கார்கள் என்று மட்டும் கிடையாது. பைக், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து வகை, எலக்ட்ரிக் கார்களுக்கும், இந்த விதிமுறை பொருந்தும்

    அதேபோல, இப்போதுள்ள எலக்ட்ரிக் வாகனங்களுக்கும், renewal கட்டணம் கிடையாது.

    சார் பேரு டிவன் காந்த்.. 40 வயசு கூட ஆகல.. ஆனால் செஞ்ச வேலையை பாருங்க.. அப்படியே ஷாக் ஆயிருவீங்க! சார் பேரு டிவன் காந்த்.. 40 வயசு கூட ஆகல.. ஆனால் செஞ்ச வேலையை பாருங்க.. அப்படியே ஷாக் ஆயிருவீங்க!

    11 வருஷம்தான்

    11 வருஷம்தான்

    2030ம் ஆண்டு முதல், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று, நிதி ஆயோக் இம்மாத துவக்கத்தில், மத்திய அரசுக்கு ஒரு பரிந்துரை வழங்கியிருந்தது. 2023ம் ஆண்டு முதல், எலக்ட்ரிக் ஆட்டோக்களை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிப்பது என்று, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2025ம் ஆண்டு முதல் 150 சிசிக்கு உட்பட்ட டூவீலர்களும் எலக்ட்ரிக்கில் இயங்குவதாக இருந்தால் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படும்.

    மாசு குறையும்

    மாசு குறையும்

    இந்தியாவில் அதிகரித்து வரும், புகை மாசுவை குறைக்க, மத்திய அரசு இந்த அதிரடி முடிவுக்கு வந்துள்ளது. 2015ம் ஆண்டு, மேற்கொள்ளப்பட்ட, பாரிஸ் தட்பவெப்ப ஒப்பந்தத்தை நிறைவேற்ற, இதுபோன்ற நடவடிக்கைதான் உதவும் என நினைக்கிறது.

    அன்னிய செலவாணி

    அன்னிய செலவாணி

    மேலும், இந்தியாவின் அன்னிய செலவாணியில் பெரும் பங்கு, கச்சா எண்ணை இறக்குமதிக்கே செலவாகிறது. எனவே கச்சா எண்ணை இறக்குமதியை படிப்படியாக குறைத்து, அதற்கு பதில், எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதே மத்திய அரசு திட்டமாக உள்ளது.

    ஒரே கல்லில் இரு மாங்காய்

    ஒரே கல்லில் இரு மாங்காய்

    எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை ஊக்கப்படுத்துவதன் மூலம், இந்திய அன்னிய செலவாணி மிச்சப்படுவதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். பல்வேறு நோய்கள் தவிர்க்கப்படும். ஒரே கல்லில் இரு மாங்காய் என்பார்களே, அது இதுதான்.

    English summary
    All electric vehicles are exempted from paying road tax for vehicle registration, the Ministry of Road, Transport and Highway issued notification.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X