• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இந்தியாவில் இதுவரை போலீசார் நடத்திய என்கவுன்டர்களும்... மரணங்களும்!!

|

டெல்லி: இந்தியாவில் இதுவரை போலீசார் நடத்திய என்கவுன்டர்களும், அதனால் ஏற்பட்ட மரணங்களும் ஒரு பார்வை. இந்த செய்தியில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஓரிரு என்கவுன்டர்களை தவிர மற்ற அனைத்தும், குற்றவாளிகள் என்று கூற முடியாது, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களுக்காக குவிந்தவர்கள். இவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். என்கவுண்டர் செய்யும்போது முறையான வழிமுறைகளை கையாள வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. அவை கடைப்பிடிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் தொடர்ந்து எழுந்து வருகிறது.

Encounter killings by police in India
 • 25, மார்ச் 1966: அப்போதைய ஒரியாவை ஆட்சி செய்து வந்த மகாராஜா பிரவிர் சந்திர பாஞ்ச் தியோ அவரது அரண்மனை முன்பே போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவருடன் மேலும் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 • 1979 முதல் 1980: இந்த ஆண்டுகளில் பீகார் மாநிலம் பாகல்பூரில் 31 குற்றவாளிகளை போலீசார் கொடூரமான முறையில் கொன்றனர். இவர்களது கண்களில் ஆசிட் ஊற்றி கொன்றதாக கூறப்பட்டது.
 • 11 ஜனவரி 1982: மான்யா சர்வே என்ற குற்றவாளி சரணடைவதற்கு போதிய அவகாசம் கொடுக்காமல் மும்பை போலீசார் சுட்டுக் கொன்றனர். இவரது நெஞ்சில் 5 புல்லட்களால் துளைத்துக் கொன்றனர். இவரது என்கவுண்டரின் பின்னணியில் எடுக்கப்பட்ட படம்தான் ''சூட்வுட் அட் வடாலா''
 • 22 மே 1987: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்து - முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் மீரட்டில் ஹசிம்புரா படுகொலை என்ற பெயரில் 42 இளைஞர்கள் காசியாபத்துக்கு வெளியே இருக்கும் முரத் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் இவர்கள் அனைவரும் அங்கிருக்கும் கால்வாயில் தூக்கி எறியப்பட்டதாக தகவல் வெளியானது.
 • 1-2 அக்டோபர் 1994: உத்தரகண்ட் தனி மாநிலம் கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக டெல்லி செல்ல இருந்த ஆறு பேரை என்கவுன்டரில் கொன்றனர். இவர்களைக் கொன்றது உத்தரப்பிரதேச போலீசார். ராம்பூரில் வைத்துக் கொன்றனர். இதை ராம்பூர் திரஹா என்கவுன்டர் என்று அழைத்தனர்.
 • 25 நவம்பர் 1994: இந்த ஆண்டில் நடந்த என்கவுன்டர் கூத்துப்பரம்பா என்கவுன்டர் என்று அழைக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவரும், முதல்வருமாக இருந்த எம்.வி. ராகவனை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
 • 1999: தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் டீ எஸ்டேட் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மாஞ்சோலை தொழிலாளர்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது போலீசார் இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 17 பேர் இறந்தனர்.
 • 2003: ஆதிவாசி கோத்ரா மஹாசபா என்ற அமைப்பின் பெயரில் ஆதிவாசிகள் தங்களுக்கு நிலம் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் முதலில் இருவர் இறந்தனர் என்று கூறிய போலீஸ் பின்னர் ஐந்து பேர் என்று கூறியது.
 • 2006: புனே பொருளாதார மண்டலத்தில் அமையவிருந்த வீடியோகான் நிறுவனத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
 • 2007: மேற்குவங்க மாநிலத்தில் கிழக்கு மித்னாபூர் மாவட்டத்தில் இருக்கும் நந்திகிராம் என்ற இடத்தில் ரசாயன தொழிற்சாலை அமைக்க சலீம் குழுமம் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது. இதை எதிர்த்த மக்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
 • 2009: திருவனந்தபுரத்தில் பீமபள்ளி என்ற இடத்தில் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஆறு பேர் பலியாயினர். இது வகுப்புக் கலவரம் என்று கூறப்பட்டது.

அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு- சென்னை மருத்துவமனையில் அனுமதி

 • 23 ஜூலை 2009: மணிப்பூர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரிடம் ஆயுதங்கள் இருந்ததாக பின்னர் போலீசார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டின்போது அங்கிருந்த கர்ப்பிணி பெண் ஒருவரும் பலியானார்.
 • 2011: ஜைதாபூர் அணு மின்நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
 • 3 ஜூன் 2011: பீகார் மாநிலத்தில் போர்ப்கஞ்ச் துப்பாக்கிச் சூட்டில் அந்த கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியாயினர்.
 • 2013: மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் உள்ளூர் கடைகளில் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக ஆறு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறுதியில் இந்த திருட்டில் உள்ளூர் போலீசாரும் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது.
 • 2015: ஆந்திராவில் இருக்கும் சித்தூர் மாவட்டத்தில் சேஷாசலம் வனப்பகுதியில் சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்டதாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். இது அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது.
 • 2018: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
 • 2019: ஐதராபாத் அருகே இளம் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்து எரித்துக் கொன்ற நான்கு பேரை போலீசார் என்கவுன்டரில் கொன்றனர்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Encounter killings by police in India: Is NHRC rules are following here
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more