டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதென்ன மூக்கு வழியாக ஸ்பிரே?.. மற்றொரு தடுப்பு மருந்தா? இந்தியாவில் அறிமுகமாகும் இங்கிலாந்து கம்பெனி

மூக்கு வழியாக ஸ்பிரே செய்யும் தடுப்பு மருந்தை இந்தியா தயாரிக்கிறது

Google Oneindia Tamil News

டெல்லி: கிலியை தந்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸை தடுக்க, மூக்கு வழியாக செலுத்தும் ஸ்பிரே மருந்தை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு அறிமுகம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸை ஒழிக்க விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் பாடுபட்டு வருகிறார்கள்.

இதற்காக மருந்தையும், சிகிச்சையையும் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.. இதுவரை நிரந்தர தீர்வுக்கான எந்தவிதமான மருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை..

உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,22,991- 4,901 பேர் மரணம் உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,22,991- 4,901 பேர் மரணம்

 தடுப்பு மருந்து

தடுப்பு மருந்து

அதேசமயம் தொற்று பரவாமல் இருக்கும் தடுப்பு நடவடிக்கைகளையும் விடாமல் முயற்சித்து கொண்டிருக்கின்றனர். அவைகள் குறித்த ஆய்வுகளின் முடிவுகளையும் அவ்வப்போது வெளியிட்டும் வருகின்றனர். அந்த வகையில், இப்போதும் ஒரு புது முயற்சியை கையில் எடுக்க உள்ளனர்.. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த போக்ஸ்பயோ என்ற நிறுவனம், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக மூக்கு வழியாக செலுத்துகிற ஸ்பிரே தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

அறிமுகம்

அறிமுகம்

இதைதான் இந்தியாவில் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் தற்போது விருப்பம் தெரிவித்துள்ளது.. இதற்கான அனுமதியையும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.. இந்த தகவலை அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.. மற்றொருபுறம், இதே தடுப்பு மருந்தை இந்திய நிறுவனமே தயாரித்து, மலிவு விலையில் கிடைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று போக்ஸ்பயோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 ஸ்பிரே மருந்து

ஸ்பிரே மருந்து

இந்த தடுப்பு மருந்தானது தொற்று பாதிப்பை தடுப்பதில் 63 சதவீதம் பயனுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.. இந்த தடுப்பூசியை, தொற்று அதிகம் பாதித்த 648 சுகாதார பணியாளர்களிடம் செலுத்தி சோதித்து பார்க்கப்பட்டுள்ளது.. அப்போதுதான் இது கொரோனா வைரஸ் பாதிப்பை 63 சதவீதம் தடுக்கும் திறனுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.. இந்த தடுப்பு மருந்தை இரு நாசிகளிலும் தலா 2 ஸ்பிரேயை ஒருவர் தானாகவே செலுத்திக்கொள்ள முடியும் என்றும், 6 முதல் 8 மணி நேரம் பாதுகாப்பைத்தரும் என்றும் சொல்லப்படுகிறது.

நம்பிக்கை

நம்பிக்கை

அந்த நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ராகேஷ் உப்பல் இதை பற்றி மேலும் சொல்லும்போது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியமானதுதான் என்றாலும், அது 100 சதவீதம் பயன் தருவதில்லை.. அப்படியே தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கொரோனா தொற்று பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது.. அதனால்தான், போக்ஸ்வெல் என்ற பெயரில் நாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து, தடுப்பூசி, சுய பாதுகாப்பு கருவிகளுடன் கூடுதல் பாதுகாப்பை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

English summary
England company launches Nasal spray corona prevention medicine
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X