டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக்டவுனை விதித்து 130 கோடி இந்தியர்களை காப்பாற்றிய பிரதமர் மோடியை உலகமே பாராட்டுகிறது.. ஜேபி நட்டா

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு தழுவிய லாக்டவுனை விதித்து 130 கோடி இந்தியர்களின் உயிரைக் காப்பாற்றிய நரேந்திர மோடி அரசாங்கத்தை உலகமே பாராட்டியுள்ளது என்று பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தெரிவித்தார்.

டெல்லியில் இருந்து காணொலி காட்சி முறையில் ஜார்கண்ட் பாஜக செயற்குழு கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா பேசுகையில், "அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் நெருக்கடியை சமாளிப்பதற்கான வழிகள் குறித்து உறுதியாக தெரியாத நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய லாக்டவுனை விதித்தார்.

Entire world lauded Modi govt for saving 130 crore Indians lives by imposing lockdown: J P Nadda

கொரோனாவிற்கு எதிரான போரில உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் விளைவாக 11 லட்சம் பேருக்கு தினமும் சோதனைகள் இப்போது நடத்தப்படுகின்றன. முன்னதாக மார்ச் மாதத்தில் வெறும் 15 பரிசோதனைகள் தினமும் என்ற அளவில் மட்டுமே இந்தியா இருந்தது.

கொரோனா பரவ தொடங்கிய ஆரம்ப நாட்களில் இந்தியாவில் வென்டிலேட்டர்கள் கட்டமைப்பு போதிய அளவு இல்லை ஆனால் இப்போது நாட்டில் மூன்று லட்சம் வென்டிலேட்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 4.5 லட்சம் பிபிஇ கிட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, மேலும் இந்தியா சுமார் 30 நாடுகளுக்கு ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்துள்ளது.

கடன் மோசடி.. ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சர் கைது கடன் மோசடி.. ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சர் கைது

தொற்றுநோய்களுக்கு மத்தியில் ஏழைகளுக்கான நலத்திட்டங்களுக்கும் மததிய அரசு லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கிறது. "கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் நவம்பர் வரை 80 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. , 8.5 கோடி விவசாயிகளுக்கு இரண்டு கட்டங்களாக ரொக்க சலுகைகள் கிடைத்துள்ளன.

1,500 தொகை ஜன தன் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உஜ்வாலா யோஜனாவின் கீழ் ஏழைகளுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. ஆத்மா நிர்பர் பாரத் அபியனின் கீழ் பொருளாதாரத்தை மீட்க பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஐநா சபையின் பொதுச்செயலாளர் கூட பாராட்டியுள்ளார்" இவ்வாறு கூறினார்.

English summary
The entire world has appreciated the Narendra Modi government for saving the lives of 130 crore Indians by imposing the coronavirus-induced nationwide lockdown, BJP chief J P Nadda said on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X