டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிஎப் பென்சன்தாரர்கள் ஆயுள் சான்றிதழை சமர்பிக்க 30ம் தேதி கடைசி தேதி.. ஈபிஎப்ஒ முக்கிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியாக அமைப்பின் (ஈபிஎப்ஒ) கீழ் நீங்கள் ஓய்வூதியம் பெறுகிறவர்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்குத் தான். ஆயுள் சான்றிதழை சமர்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியாக அமைப்பின் (ஈபிஎப்ஒ) கீழ் உங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்கு இந்த மாத இறுதிக்குள் நீங்கள் பிஎப் அமைப்பிடம் ஆயுள் சான்றிதழ் அல்லது ஜீவன் பிரமாண பாத்திரத்தை சமர்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

ஒருவேளை நீங்கள் சான்றிதழை சமர்ப்பிக்கத் தவறினால், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது. இருப்பினும், ஆயுள் சான்றிதழ் கிடைத்த பின்னர், மீண்டும் உங்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். ஆனால் ஆயுள் சான்றிதழ் வழங்காமால் இருக்கும் வரை உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் போகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கல்லெடுத்து அடிக்க நினைத்தால் காயப்பட்டு கொள்வீர்கள்.. ரஜினிக்கு ஜெயக்குமார் அட்வைஸ்கல்லெடுத்து அடிக்க நினைத்தால் காயப்பட்டு கொள்வீர்கள்.. ரஜினிக்கு ஜெயக்குமார் அட்வைஸ்

நவம்பரில் கட்டாயம்

நவம்பரில் கட்டாயம்

1995ம் ஆண்டு பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியதாரர்களும் ஆயுள் / மறுமணம் செய்யாத சான்றிதழை வழங்க வேண்டும், இதற்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் ஒரு வங்கி மேலாளர் / கெஜட்டேட் அதிகாரி மூலம் சான்றொப்பம் பெற வேண்டும்.

நவம்பர் 1ல் தொடங்கியது

நவம்பர் 1ல் தொடங்கியது

ஆயுள் சான்றிதழ்களை உருவாக்குதல் மற்றும் சமர்ப்பிக்கும் பணிகள் நவம்பர் 1 முதல் தொடங்கியது. இந்த பணிகளை முடிக்க நவம்பர் 30ம் தேதி கடைசி நாள் ஆகும்.

அரசு ஓய்வூதியதாரர்களைப் போலவே, ஈ.பி.எஃப்.ஓ ஓய்வூதியதாரர்களும் டிஜிட்டல் முறையில் வாழ்க்கைச் சான்றிதழ்களை உருவாக்க முடியும். டிஜிட்டல் ஆயுள் சான்றிதழுக்கான பயோமெட்ரிக் சரிபார்ப்பின் போது உங்கள் ஆதார் அட்டை எண், ஓய்வூதிய கட்டண உத்தரவு (பிபிஓ) எண், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் மொபைல் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.

சேவை மையம் வழியாக

சேவை மையம் வழியாக

ஓய்வூதியம் பெறுவோர் டிஜிட்டல் வாழ்க்கை (ஆயுள்) சான்றிதழை எந்தவொரு ஈபிஎஃப்ஒ அலுவலகத்திலும் அல்லது ஓய்வூதியம் வழங்கும் வங்கி, பொதுவான சேவை மையம் அல்லது உமாங் பயன்பாட்டின் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம். ஜீவன் பிரமான் பத்ரா (வாழ்க்கை) சமர்ப்பித்த பிறகு, எந்த ஆவணத்தையும் ஈ.பி.எஃப்.ஓ அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை.

டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்

டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்

இந்தியா முழுவதும் அமைந்துள்ள பல்வேறு குடிமக்கள் சேவை மையங்களில் இருந்து ஓய்வூதியம் பெறுவோருக்கான டிஜிட்டல் லைஃப் சான்றிதழை, தபால் அலுவலகம், வங்கிகள் போன்ற ஓய்வூதிய வழங்கல் முகவர் அலுவலகங்களின் (பி.டி.ஏ) அலுவலகங்களிலிருந்து பெறலாம்.

பயோமெட்ரிக் சாதனம்

பயோமெட்ரிக் சாதனம்

இல்லாவிட்டால் சான்றிதழை ஒரு மடிக்கணினி அல்லது மொபைல் போனைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தும் ஜீவன் பிரமான் போர்டல் மூலம் உருவாக்கலாம்.இதன்படி நீங்கள் அதை வீட்டிலிருந்து செய்ய விரும்பினால், கருவிழி அல்லது கைரேகை தரவைப் பிடிக்க உங்களுக்கு ஒரு பயோமெட்ரிக் சாதனம் தேவைப்படும்.

English summary
EPFO pensioner requires Aadhaar Card,PPO Number, Bank Details & Mobile Number during the biometric verification for Digital Life Certificate (Jeevan Pramaan patra)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X