• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மாத சம்பளதாரர்களே.. பிஎப் தரப்பிலிருந்து உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

|
  EPFO Members pension age may get increased

  டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) மூலம் ஓய்வூதியம் பெற உள்ளோருக்கு ஒரு நல்ல சேதி காத்துக்கொண்டு இருக்கிறது.

  பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம, ஓய்வூதியம் தொடர்பான ஒரு முக்கிய விதியை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த முடிவுதொடர்பான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக கூறி செய்தி வெளியிட்டுள்ளது.

  இந்த செய்தியின்படி, ஓய்வூதியம் பெறுபவர்களின் வயது வரம்பை 58 வயதிலிருந்து 60 ஆண்டுகளாக உயர்த்தப்பட உள்ளதாம். இதனால் கூடுதலாக 2 ஆண்டுகள், பணிக்காலம் கூடும் என்பதால் இது தொழிலாளர்களுக்கும் நல்ல செய்திதான்.

  நச்சுன்னு நங்கூரத்தை போட்ட பொன்.ராதா.. ரஜினிக்கு பகிரங்க அழைப்பு.. பாஜகவுக்கு வருவாரா!

  உலகில் சராசரி வயது அதிகரிப்பு

  உலகில் சராசரி வயது அதிகரிப்பு

  இதற்காக, வருங்கால வைப்பு நிதி சட்டம் 1952 இல் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. உலகில் சராசரி வயது அதிகரித்து வருவதும், இந்தியாவிலும் சராசரி வயது அதிகரித்து வருவதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

  65 வயது

  65 வயது

  உலகின் பெரும்பாலான நாடுகளில், ஓய்வூதிய நிதியிலிருந்து ஓய்வூதியம் கொடுக்கும் வயது சுமார் 65 வயதாக உள்ளது. எனவே, இந்தியாவிலும் ஓய்வூதிய வயதை மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது.

  58 வயதில் ஓய்வூதியம்

  58 வயதில் ஓய்வூதியம்

  நீங்கள் வெவ்வேறு பணிகளில் இருந்திருந்தாலும், 10 ஆண்டுகளாக பணிபுரிந்திருந்தால், நீங்கள் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர். தற்போதைய விதிகளின்படி, ஒரு குறிப்பிட்ட தொகை 58 வயதிற்குப் பிறகு ஓய்வூதியமாக வழங்கப்படத் தொடங்குகிறது.

  வயது அதிகரிப்பு

  வயது அதிகரிப்பு

  எனவே, இனி 58 வயதிற்கு பதிலாக 60 வயதிற்குப் பிறகு ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யப்படலாம். இருப்பினும் இது தொழிலாளியின் விருப்ப தேர்வாகவே இருக்குமே தவிர புகுத்தப்படாதாம். இவ்வாறு ஓய்வூதிய வயதை 2 வருடங்கள் தள்ளிப்போடும் தொழிலாளிக்கு ஊக்கத்தொகை வழங்கவும் திட்டம் உள்ளதாம்.

  அங்கீகாரம்

  அங்கீகாரம்

  ஈ.பி.எஃப்.ஓவின் மத்திய அறங்காவலர் குழு நவம்பரில் கூட உள்ளது, அதில் இந்த முன்மொழிவை முன்வைக்க உள்ளார்கள். இந்த முன்மொழிவு அறங்காவலர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டால், அது அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பப்படும், இதையடுத்து தொழிலாளர் அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், அதன் பின்னர் அந்த திட்டம் அமல்படுத்தப்படும்.

  இப்படித்தான் செல்கிறது

  இப்படித்தான் செல்கிறது

  தொழிலாளர்கள் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும் தொகை இரண்டு கணக்குகளுக்கு செல்கிறது. முதலாவது வருங்கால வைப்பு நிதி அதாவது ஈபிஎஃப், இரண்டாவது ஓய்வூதிய நிதி அதாவது இபிஎஸ். சம்பளம் பெறும் ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் ஈ.பி.எஃப். அதே நேரத்தில், முதலாளியிடமிருந்து 3.67 சதவிகிதம் ஈபிஎஃப் (பணியாளர் வருங்கால வைப்பு நிதியம்) மற்றும் மீதமுள்ள 8.33 சதவிகிதம் பணியாளர் ஓய்வூதிய திட்டத்தில் (வேலைவாய்ப்பு ஓய்வூதிய திட்டம்) டெபாசிட் செய்யப்படுகிறது.

  இரு தரப்புக்கும் நல்லது

  இரு தரப்புக்கும் நல்லது

  இந்த திட்டம் அமலுக்கு வந்தால், ஓய்வூதியதாரர்களுக்கு 2 வருட கூடுதல் சேவையின் கீழ் ஓய்வூதியத்தை அதிகரிக்கும் வாய்ப்பை தரும். ஓய்வூதிய நிதியத்தில் தற்போது நிதிப் பற்றாக்குறை நிலவுகிறது. தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறும் வயதை 2 வருடங்கள் வரை கூட்டினால், இந்த நிதிப் பற்றாக்குறையில், ரூ.30,000 கோடி அளவுக்கு குறையும். இது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு சற்று நிம்மதியை தரும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  The Employees’ Provident Fund Organisation (EPFO) may increase the pension age limit for the employees, says sources.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more