டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இஎஸ்ஐ பங்களிப்பு தொகை 4 சதவீதமாக குறைப்பு.. மத்திய அரசு அதிரடி.. தொழிலாளர், முதலாளிகள் சுமை குறையும்

Google Oneindia Tamil News

டெல்லி: தொழிலாளர் காப்பீட்டு திட்டமான (ESI) மீதான பங்களிப்பு, தொகையை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், தொழிலாளர்களும், முதலீட்டாளர்களும் பலனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தொழிலாளர் காப்பீட்டு திட்ட சட்டத்தின்படி, செலுத்த வேண்டிய 6.5 சதவீதம் என்ற மதிப்பிலான மொத்த தொகை, 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

 ESI contribution rates reduced 6.5pc to 4pc

இதன்படி, தொழில் உரிமையாளர் செலுத்த வேண்டிய தொகை 4.75 சதவீதத்திலிருந்து, 3.25 சதவீதமாக குறையும். தொழிலாளி செலுத்த வேண்டிய பங்குத் தொகை, 1.75%லிருந்து 0.75%மாக குறைந்துள்ளது.

பங்களிப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது, கணிசமான நன்மைகளை கொண்டுவரும். ESI திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் இன்னும் கூடுதலாக பதிவு செய்யப்படும் வாய்ப்பு ஏற்படும். அத்தோடு, அமைப்பு சார் துறைக்குள் இன்னும் அதிகமான தொழிலாளர்களை கொண்டு வரும். இதேபோல், பங்களிப்பு தொகையை குறைத்துள்ளதன் காரணமாக, முதலாளிகள் பங்களிப்பு நிதி அளவு குறையும்.

முக்குலத்தோர் புலிப்படையை தொடர்ந்து பனங்காட்டு படையும் ஆவேசம்.. பா. ரஞ்சித்துக்கு எச்சரிக்கை முக்குலத்தோர் புலிப்படையை தொடர்ந்து பனங்காட்டு படையும் ஆவேசம்.. பா. ரஞ்சித்துக்கு எச்சரிக்கை

இது, நிறுவனங்களின் மேம்படுத்தப்பட்ட நம்பகத்தன்மைக்கு வழிவகுக்கும். வர்த்தக எளிமைக்கு வழிவகுக்கும். இஎஸ்ஐ பங்களிப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், சட்டத்திற்கு இணக்கமான சூழலுக்கு மேலும் பலர் வருவார்கள்.

ப்பீட்டு பலனாளி குடும்பங்களுக்கு, ஊழியர் 'அரசு காப்பீடு சட்டம் 1948 (ESI சட்டம்) மருத்துவம், மகப்பேறு, இயலாமை உதவி போன்றவற்றை கொடுக்கக் கூடியது. இஎஸ்ஐ சட்டம், ஊழியர் ஸ்டேட் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC) மூலமாக நிர்வகிக்கப்படுகிறது. இ.எஸ்.ஐ. சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நன்மைகள், முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் வழங்கும், பங்களிப்புகளால் சாத்தியப்படுகிறது.

இஎஸ்ஐ சட்டத்தின் கீழ், முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் இருவருமே, தங்கள் பங்களிப்பு தொகையை வழங்குகிறார்கள். தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் மூலம் மத்திய அரசு, பங்களிப்பு விகிதத்தை முடிவு செய்யும்.

15 ஆயிரம் வரை மாதச் சம்பளம் பெறுவோருக்கு மட்டுமே இஎஸ்ஐ சலுகைகள் வழங்கப்பட்ட நிலையை மாற்றி, 2017ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல், ரூ.21,000 வரை ஊதியம் பெறுவோருக்கு இஎஸ்ஐ சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2018-19ம் நிதியாண்டு நிலவரப்ப்டி, 12,85,392 ஊழியர்கள் இஎஸ்ஐ வசதி பெற்றுள்ளனர். 2015-16ல் இது 7,83,786 என்ற அளவில் இருந்தது. தற்போதைய நிலவரப்படி, 3.6 கோடி மக்களுக்கு இஎஸ்ஐ பலன்கள் சென்றடைகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Union Government on Thursday reduced the contribution the ESI Act from 6.5 percent to 4 percent. While the employers' contribution has been reduced from 4.75 percent to 3.25 percent, the employees' contribution has been reduced from 1.75 percent to 0.75 percent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X