டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனாவில் மூடப்பட்ட மருந்து நிறுவனங்கள்! இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அபாயம்

Google Oneindia Tamil News

Recommended Video

    coronavirus:A timeline of the COVID-19 outbreak

    டெல்லி: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்திய மருந்து உற்பத்தி கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இந்தியாவில மருந்து தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

    இந்தியா 70 சதவீத மருந்து மற்றும மூல பொருட்களுக்கு சீனாவையே நம்பி உள்ள நிலையில் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

    இந்த சூழ்நிலையில் தலைவலி, காய்ச்சல், நீரழிவு நோய் மருந்துகள் உள்பட அத்தியாவசிய மருந்துகள் இந்த மாதம் வரையே இந்தியாவில் இருப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    சாதித்த சீன மருத்துவர்கள்! கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமான கேமரூன் மாணவர்! எப்படி வென்றார்? சாதித்த சீன மருத்துவர்கள்! கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமான கேமரூன் மாணவர்! எப்படி வென்றார்?

    தொழில் கூட்டமைப்பு

    தொழில் கூட்டமைப்பு

    சீனாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அங்கு பல்வேறு தொழில்துறைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் இந்தியாவிலும் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. தொழில் துறையினரிடம் இருந்து பெற்ற தகவலின்படி சில தகவல்களை அறிக்கையில் கூறியுள்ளது.

    2மாதம் வரை இருப்பு

    2மாதம் வரை இருப்பு

    அதில் கொரோனா வைரசால் மருந்து பொருட்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா 70 சதவீத மருந்து தேவைகளுக்கு சீனாவையே நம்பி உள்ளது. சில மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் இருப்பு 2 முதல் 3 மாதம் வரை தான் உள்ளது. ஆனால் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

    பாராசிட்டமால்

    பாராசிட்டமால்

    வலி நிவாரணியாக பயன்படும் புரூபன், வலி நிவாரணி மற்றும காய்ச்சல், தலைவலிக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் பாராசிட்டமால், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் டெல்மிசார்டான், நோய் எதிர்ப்பு மருந்துகளான ஜென்டாமைசின் சல்பேட், ஆடமபிசிலின் டிரைஹைட்ரேட், சிப்ரோ பிளாக்சன் ஹைட்ரோ குளோரைடு ஆகியவை இந்த மாதம் 20ம் தேதி வரை தான் இருப்பு உள்ளது.

     நீரழிவு மருந்து

    நீரழிவு மருந்து

    இதேபோல் நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான நியோமைசின் சல்பேட்டும் 20ம் தேதி வரைக்கும் தான் இருப்பு உள்ளது. நீரழிவு மருந்தான ஹெட்பார்மின் ஹைட்ரோ குளோரைடு மார்ச் 20ம் தேதி வரை தான் இருப்பு உள்ளது. ஆனால் சீனாவில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளது.இந்த மாதமும் மூடப்பட்டால் இந்தியாவில் மருந்து பொருட்களின் விலை அதிகரிக்கும் என தொழில் கூட்டமைப்பு தனது அறிக்கையில் கூறி உள்ளது.

    English summary
    essential drugs production fall in india due to china coronavirus Govt mulls export ban on 12 essential drugs
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X