டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிளம்பியது அடுத்த பிரச்சனை.. மருத்துவ சேவைகள் கடும் பாதிப்பு.. சிகிச்சையில் பின்னடைவு.. லாக்டவுனால்!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மார்ச் மாதத்தில் நாடு தழுவிய லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் மருத்துவமனைகளில் கொரோனாவை தவிர மற்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது பெருமளவில் வீழ்ச்சியடைந்தது, புற்றுநோய் சிகிச்சை மற்றும் மருத்துவமனை பிரசவங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தேசிய சுகாதார ஆணையம் ஜனவரி 1 முதல் ஜூன் 2 வரை லாக்டவுன் காலத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கி மேற்கொண்ட ஆய்வில் (PM-JAY Under Lockdown: Evidence on Utilization Trends ) புற்றுநோயியல் சேவைகளில் 64 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் மருத்துவமனை குழந்தை பிரசவங்கள் 26 சதவீதம் குறைந்துள்ளது.

லாக்டவுன் அறிவிக்கப்பட்ட முதல் 10 வாரங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கள் கிடைப்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது என்பது அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த பத்து வாரங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சராசரி சிகிச்சைகாக கோரிக்கை வைப்பது, லாக்டவுனுக்கு முந்தைய பன்னிரண்டு வாரங்களில் காணப்பட்ட வார சராசரியை விட 51 சதவீதம் குறைவாக இருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

முதல்நாள் பிரச்சாரத்திற்கு சென்ற அதிபருக்கு பெரிய ஷாக்.. டிரம்பை வீழ்த்திய டிக்டாக் டீம்.. பின்னணி!முதல்நாள் பிரச்சாரத்திற்கு சென்ற அதிபருக்கு பெரிய ஷாக்.. டிரம்பை வீழ்த்திய டிக்டாக் டீம்.. பின்னணி!

குறைவான பாதிப்பு

குறைவான பாதிப்பு

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் சிகிச்சை பெறுவது அஸ்ஸாம், மகாராஷ்டிரா மற்றும் பீகார் மாநிலங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான சரிவு ஏற்பட்டுள்ளது அதே நேரத்தில் உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் கேரளாவில் மிகச் சிறிய சரிவுகளே (சுமார் 25 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக) காணப்பட்டன என ஆய்வில் தெரியவந்துள்ளது.

யார் செல்லவில்லை

யார் செல்லவில்லை

பெண்கள், இளைய மற்றும் வயதான மக்கள் (20 வயது மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) ஆண்கள், இளைஞர்கள் அல்லது நடுத்தர வயதினரை விட அதிகமானவர்கள் சிகிச்சைக்கு செல்வதை குறைத்துள்ளனர். பிரபல ஆங்கில ஊடகத்துடன் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன், மருத்தவ சேவைகளை வழங்குவதில் ஏற்பட்ட பின்னடைவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஒப்புக் கொண்டார்.

பிற நோயால் இறப்பது

பிற நோயால் இறப்பது

"கோவிட் -19 காரணமாக மக்கள் இறப்பதைத் தவிர, இருதய நோய்கள், பக்கவாதம், காசநோய் போன்ற பிற நோய்களால் மக்கள் இறப்பதைப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை, ஏனெனில் அந்த நேரத்தில் மக்களுக்குத் தேவையான சேவைகள் கிடைக்கவில்லை. இதற்கு சில யுக்தி சார்ந்த திட்டமிடல் மற்றும் முதலீடு தேவைப்படும் "என்று சுவாமிநாதன் கூறினார்.

அறுவை சிகிச்சை இல்லை

அறுவை சிகிச்சை இல்லை

ஆயுஷ்மான் பாரத் நிதியை பொதுமக்களிடமிருந்து தனியார் மருத்துவமனைகளுக்குப் பயன்படுத்துவதில் ஒரு சிறிய பிரச்சனைகள் இருந்திருப்பதாக கூறப்பபடுகிறது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்த காரணிகளால் கண்புரை செயல்பாடுகள் மற்றும் கூட்டு மாற்று போன்ற திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் 90 சதவீதத்திற்கும் மேலாக சரிவை சந்தித்தன, ஹீமோடையாலிசிஸ் 6 சதவீதம் மட்டுமே குறைந்தது. இருதய அறுவை சிகிச்சையும் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. குழந்தை பிரசவம் மற்றும் புற்றுநோய் பராமரிப்புக்கான சேர்க்கைகளில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டது பெரும் கவலைக்குரியதாகும்.

கொரோனா சிகிச்சையில் ஆர்வம்

கொரோனா சிகிச்சையில் ஆர்வம்

கோவிட் -19 அல்லது கொரானா சிகிச்கைக்கு மருத்துவமனைகள் அதிக ஆர்வம் காட்டியதே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்று அறிக்கை கூறுகிறது. மருத்துவமனையில் தொற்றுநோயால் பயப்படுவதால் சிகிச்சைக்கு செல்வதற்கு மக்கள் பயந்து இருக்கலாம் அல்லது கைவிட்டிருக்கலாம் . இதேபோல் பொது போக்குவரத்து ரத்து மற்றும் கடும்கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் மருத்துவமனைகளை அடைய முடியாமல் போயிருக்கலாம் அல்லது புதிய பொருளாதார நெருக்கடியால் போக முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கிடைக்கவில்லை

கிடைக்கவில்லை

பிரபல ஆங்கில ஊடகத்திடம் பேசிய சுகாதார ஆர்வலர் அசோக் அகர்வால், இந்த சாய்வு குறைந்தது ஆச்சரியமல்ல. நோயாளிகள் பலமுறை மருத்துவமனைகளால் திருப்பி விடப்பட்டு தங்கள் கிராமங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல நோயாளிகளும் பயப்படுகிறார்கள். இந்தியாவில் காசநோய் இனி ஒரு பிரச்சினையாக இருக்காது என்று அர்த்தமல்ல. மற்ற நோயாளிகளை மருத்துவ மனைகள் புறக்கணிக்கின்றன. "கோவிட் மற்றும் கோவிட் அல்லாத நோயாளிகள் இருவரும் போதுமான கவனிப்பு மற்றும் கவனத்திற்கு தகுதியானவர்களாக பார்க்கின்றன" என்றார்

Recommended Video

    அசத்திய Bangalore... கொரோனாவை கட்டுப்படுத்தியது எப்படி?
    மருத்துமனைகளில் இல்லை

    மருத்துமனைகளில் இல்லை

    பிரசவ கேஸ்கள் வீழ்ச்சி பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மிகவும் சீரானதாக இருந்தது என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. . சிஏபிஜி / பைபாஸ் போன்ற இருதய அறுவை சிகிச்சை முறைகள் லாக்டவுனால் கிட்டத்தட்ட 80 சதவீதம் சரிவை சந்தித்தன. தொற்றுநோயை ஒடுக்கும் நடவடிக்கைகளை இடைவிடாமல் இறுக்குவதும் தளர்த்துவதும் பல மாதங்களுக்கு அவசியமாக இருக்கும் என்பதாக அறிக்கை முடிகிறது. முக்கிய சுகாதாரத் திட்டங்களில், கொரோனா சிசிக்சையால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பது பெரும் சவாலாக இருக்கும். எனினும் தொடர்ந்து கண்காணித்தால் சரி செய்யலாம்.

    English summary
    the government report shows that access to essential Essential Medical Services was a major problem due to lockdown
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X