டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் இருந்து துபாய்க்கு மறு அறிவிப்பு வரும் வரை விமானங்கள் நிறுத்தம்... : எட்டிஹாட் ஏர்வேஸ்

Google Oneindia Tamil News

டெல்லி : எட்டிஹாட் ஏர்வேஸ் இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் விமானங்களை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் அங்கிருந்து விமானங்கள் வர ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளதாக விமான சேவையை எட்டிஹாட் ஏர்வேஸ் ரத்து செய்துள்ளது.

இது தொடர்பாக எட்டிஹாட் ஏர்வேஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரக அரசு வெளியிட்ட தடை உத்தரவுகளைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எட்டிஹாட்டின் பயணிகள் விமான சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படாது.

Etihad Airways has stopped flights from India to the UAE till further notice

இந்தியாவில் இருந்து பயணிகளை ஏற்றிச்செல்ல எட்டிஹாட்டிற்கு அனுமதி இல்லை. இருப்பினும், ஐக்கிய அரபு அமீரக குடிமகன்கள், தூதர்கள் , அரசு அலுவல் பூர்வமான பிரதிநிதிகள் மற்றும் துபாயில் நிரந்தர குடியுரிமை வை;த்திருப்பவர்கள் ஐக்கிய அரபு எமிரேட் டிற்கு வருவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பயணிகள் வருகைக்கு அமீரகம் ஒப்புதல் அளித்தாலும் தனிமைப்படுத்தப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள், "என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

எனினும் எட்டிஹாட் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவுக்கு சரக்கு விமானங்களை இயக்கும் என்றும் அறிவத்துள்ளது சரக்கு விமானங்கள் இரு திசைகளிலும் எந்தவித பாதிப்பும் இன்றி தொடர்ந்து இயங்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Etihad Airways has stopped flights from India to the UAE till further notice, a spokesperson of the airline said. The move came after the UAE government banned flights from India amid the COVID-19 pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X