டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாட்ஸ் அப் மூலம் ரூ. 47 ஆயிரம் கோடிக்கு தீவு வாங்கிய ஐரோப்பியர்!!

Google Oneindia Tamil News

டெல்லி: அட்லாண்டிக் கடல் பகுதியில் அயர்லாந்து ஒட்டி, தென்மேற்கில் ஐரிஷ் பகுதியில் இருக்கும் ஹார்ஸ் தீவை ஐரோப்பியர் ஒருவர் வீடியோவில் பார்த்து, வாட்ஸ் அப் மூலம் ரூ. 47 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளார். அந்த தீவின் பரப்பளவு 157 ஏக்கர். அந்த தீவைப் பார்க்காமலே வாங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பணம் படைத்தவர்கள் தங்களது வசதிக்கு ஏற்ப குட்டி குட்டி தீவை வாங்குவது வழக்கம். தற்போது கொரோனா வைரஸ் பரவலால் ஒருவருக்கொருவர் சந்திக்க முடியாமல், பயணிக்க முடியாமல் உள்ளனர். ஆனால், முகேஷ் அம்பானி போன்ற தொழில் அதிபர்களுக்கு இது பெரிய விஷயமில்லை. கொரோனா பொது முடக்கத்திலும் கோடி கோடியாக இருந்த இடத்தில் இருந்து கொட்டி வருகின்றனர்.

European man bought private island for USD 6.3 billion deal the business in Whatsapp

அந்த வகையில் தற்போது ஐரோப்பிய பகுதியில் ஹார்ஸ் தீவை ஐரோப்பிய ஒருவர் வாங்கி இருக்கிறார். இந்த தீவில் மூன்று பீச், ஏழு வீடு, வனவிலங்குகள் சரணாலயம், விருந்தினர் இல்லம் ஆகியவை இருக்கின்றன. இங்கு தாமிர தொழிற்சாலையும் உள்ளது. 137 மக்கள் இந்த தீவில் வசித்து வந்துள்ளனர்.

European man bought private island for USD 6.3 billion deal the business in Whatsapp

இந்த தீவில் ஹெலிபேட், ஜிம், விளையாட்டு அரங்கம், மின் வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி என்று அனைத்தும் உள்ளது. மாண்டேக் என்ற ரியல் எஸ்டேட் கைக்கு இந்த தீவு சென்ற பின்னர் அங்கு மக்கள் யாரும் இல்லை. தற்போது இந்த ரியல் ஈஸ்டேட்டிடம் இருந்து ஐரோப்பியர் ஒருவர் வாங்கி இருக்கிறார். இந்த தீவில் 4,500 சதுர அடியில் இருக்கும் வீட்டில் ஆறு படுக்கை அறைகள் உள்ளன.

English summary
European man bought private island for USD 6.3 billion deal the business in Whatsapp
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X