டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1 மணி நேரத்துக்கு 1 மாணவர் தற்கொலை...2019ல் 3ஆம் இடத்தில் தமிழ்நாடு...அதிர்ச்சி ரிப்போர்ட்!!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்தாண்டு ஒரு மணி நேரத்துக்கு ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கும் அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் கடந்தாண்டுதான் அதிகளவில் 10,335 மாணவர்கள் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த 1995 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து 2019 டிசம்பர் 31 ஆம் தேதி வரை 1.7 லட்சம் மாணவர்கள் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் 52% பேர் கடந்த பத்தாண்டுகளில் தற்கொலை செய்து கொண்டவர்கள். மீதமுள்ள 85,824 பேர் 1995 முதல் 2008 ஆம் ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டவர்கள். இந்த தகவலை தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Every hour one student suicide 10335 students in committed suicide in 2019

இதற்கு காரணம் மன அழுத்தம், மனநலம் சார்ந்த விஷயங்கள், போதைக்கு அடிமையாதல் ஆகியவை காரணங்களாக கூறப்படுகிறது. மன அழுத்தம் ஏற்பட்ட பின்னர் அதை எவ்வாறு கையாளுவது என்று மாணவர்களுக்கு தெரிவதில்லை. அதற்கு தீர்வு எவ்வாறு காண வேண்டும், நெருங்கியவர்களுடன் ஆலோசனை பெற வேண்டும் என்பது தெரிவதில்லை. இதனால், மாணவர்கள் தற்கொலை என்ற முடிவை பரிதாபமாக தேர்வு செய்து விடுகின்றனர்.

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட 10,335 மாணவர்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து மட்டும் 44% மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் 1,487, மத்தியப் பிரதேசத்தில் 927, தமிழ்நாட்டில் 914, கர்நாடகாவில் 673, உத்தரப் பிரதேசத்தில் 603 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக 10 அல்லது 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இக்கட்டான சூழலில் எவ்வாறு முடிவு எடுப்பது என்று தெரியாமல் போகிறது. இதனால், மன அழுத்தம், விரக்திக்கு தள்ளப்படுகின்றனர் என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அக்கா ஏறி மிதிச்சா.. மாவு வருதே.. இவங்கதான் உண்மையான அக்கா ஏறி மிதிச்சா.. மாவு வருதே.. இவங்கதான் உண்மையான "வில்லேஜ் விஞ்ஞானி" பாஸ்! - வைரல்

1996-1999க்கு இடைப்பட்ட கால கட்டத்தில் 5.2% சதவீத மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 1995ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 6.6% மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2001ஆம் ஆண்டுக்கு முந்தைய, பிந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்கொலை 5% ஆக மட்டுமே இருந்துள்ளது. 2010 - 2014, ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அதிகபட்சமாக தற்கொலை 6%ஆக இருந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த சதவீதம 7% ஆக உள்ளது என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

English summary
Every hour one student suicide 10335 students in committed suicide in 2019
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X