டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் ராணுவ தளபதி ஷெசல்ஸ் நாட்டு தூதராக நியமனம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஷெசல்ஸ் நாட்டிற்கான இந்தியத் தூதராக தல்பீர் சிங் சுகாக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் ராணுவ தளபதியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷெசல்ஸ் நாட்டிற்கான தூதராக தல்பீர் சிங்கை நியமித்து, அதற்கான அறிவிப்பை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து அவர் விரைவில் ஷெசல்ஸ் நாட்டுக்கான இந்திய தூதராக பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார்.

Ex-army commander was appointed as the ambassador of seychelles

நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தல்பீர் சிங் சுகாக் ஷெசல்ஸ் நாட்டுக்கான இந்திய தூதராக உள்ளார். ஏனெனில் தல்பீர் சிங் சுகாக், பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாகவும், அதன் மூலம் அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின.

மோடி அலையெல்லாம் இல்ல.. இது சுனாமி! எதிர்க்கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்திய வாரணாசி ரோடு ஷோ மோடி அலையெல்லாம் இல்ல.. இது சுனாமி! எதிர்க்கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்திய வாரணாசி ரோடு ஷோ

ஆனால் தல்பீர் சிங் சுகாக் தற்போது ஷெசல்ஸ் நாட்டுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ராணுவ தளபதியாக இருந்த காலக்கட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக 16 அதிரடித் தாக்குதல்களை நடத்தியவர் தல்பீர் சிங். அவருக்கு தூதர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது வரவேற்க தக்க ஒன்று என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
Talibir Singh Sugak has been appointed as Indian ambassador to the seychelles country
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X