டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் காங். சுமையை தூக்க தயார்.. ராகுல் பதவியை என்னிடம் கொடுங்க.. முன்னாள் அமைச்சர் ஆஃபர்!

Google Oneindia Tamil News

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை இரு ஆண்டுகளுக்கு ஏற்க நான் தயாராக இருக்கிறேன் என முன்னாள் அமைச்சர் அஸ்லம் ஷேர்கான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் தோற்று போய்விடும் என எதிர்க்கட்சியினரால் எதிர்பார்க்கப்பட்ட பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல்காந்தி அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுலின் ராஜினாமாவை ஏற்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் போர்க் கொடி தூக்கினர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் .. சென்னையில் 5,720 வாக்கு சாவடிகள் அமைப்பு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் .. சென்னையில் 5,720 வாக்கு சாவடிகள் அமைப்பு

போராட்டம்

போராட்டம்

இதையடுத்து ராகுலை சமாதானப்படுத்தும் முயற்சியில் மூத்த தலைவர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் சமாதானம் அடைந்த ராகுல் திடீரென முரண்டு பிடிக்கத் தொடங்கியுள்ளார். இதையடுத்து டெல்லியில் அவரது வீட்டு முன் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் போராட்டம் நடத்தினார்.

ஷேர்கான் கடிதம்

ஷேர்கான் கடிதம்

சென்னையிலும் தமிழக காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என ராகுல் விருப்பப்படுகிறார். இந்த நிலையில் ராகுல் காந்திக்கு முன்னாள் அமைச்சர் ஷேர்கான் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

பொறுப்பு

பொறுப்பு

அதில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ய விரும்புவதாகவும் அந்த பொறுப்பு ராகுல் காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என நீங்கள் கூறியதை நான் அறிவேன்.

விரும்பினால்

விரும்பினால்

இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் தேவை. அக்கட்சிக்கு நம்பிக்கை அளிக்க யாராவது ஒருவர் முன்னோக்கி வர வேண்டும் என நான் நினைத்தேன். ராகுல் காந்தியாகிய நீங்கள் கட்சி தலைவராக இருக்க வேண்டும் என விரும்பினால் நீங்களே தொடருங்கள்.

இரு ஆண்டுகளுக்கு

இரு ஆண்டுகளுக்கு

ஆனால் வேறு யாராவது அதற்கு பொருத்தமானவர் என நீங்கள் நினைத்தால் அந்த வாய்ப்பை நான் ஏற்கிறேன். நேரு குடும்பத்திற்கு வெளியில் இருக்கும் யாருக்காவது கொடுக்க நினைத்தால் அதை எனக்கு கொடுங்கள். இந்த பதவியை நான் இரு ஆண்டுகளுக்கு ஏற்கிறேன்.

வாய்ப்பு அளிக்கலாம்

வாய்ப்பு அளிக்கலாம்

காங்கிரஸுக்கு மக்களுக்கும் இடையேயான தொடர்பு குறைந்ததே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர காரணம். மீண்டும் ஒரு முறை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும். மாற்றம் தேவை என்பதில் எந்த சந்தேகமே இல்லை. என்னை காட்டிலும் வேறு யாவராவது தலைமை பதவிக்கு பொருத்தமானவர் என நீங்கள் கருதினால் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என ஷேர்கான் தெரிவித்தார்.

English summary
Former Union Minister Aslam Sherkhan ready to replace Rahul Gandhi as the Congress President for 2 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X