டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சரியாக 100 நாள் முன்பு அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ்! இந்த 100 நாட்களில் உலகம் எப்படி மாறியது!

Google Oneindia Tamil News

டெல்லி: 2020ல் கொடூரமான கொரோனா இந்த உலகத்தை ஆட்டிப்படைக்கப்போவது தெரியாமல் உலகமே கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அன்று 2020ம் ஆண்டை கொண்டாட தயாரானது.

2010 முதல் 2019 முடியும் வரை பல்வேறு துயரங்கள் மற்றும் மாற்றங்களை ந்த உலகம் பார்த்திருந்தது. பிரிட்டன் நாடு ஐரோப்பாவில் இருந்து வெளியேறும் பிரெக்ஸிட்டையும், மற்ற உலக நாடுகள் சிரிய உள்நாட்டு போர் மற்றும சமூக ஊடக பெருக்கம் போன்றவற்றை பார்த்தன. இதேபோல் தான் இந்த காலக்கட்டத்தில் தான் தேசியவாத சிந்தனைகள் உலகம் முழுவதும் மீண்டும் உயிர் பெற ஆரம்பித்தது. 2020 பிறப்பதற்கான கடைசி சில மணி நேர கவுண்டவுன்கள் தொடங்கும் போது இந்த உலகத்தையே அழிக்க போகும் கொரோனா குறித்து முதல்முறையாக சீனா அறிவித்தது.

ஆம் டிசம்பர் 31 ம் தேதி மதியம் 1.38 மணியளவில், சீன அரசு தனது வலைதளத்தில் 1.1 கோடி மக்கள் வசிக்கும் தொழில்துறை நகரமான வுஹானில் தென் சீன கடல் உணவு மொத்த சந்தையைச் சுற்றியுள்ள பகுதியில் "அறியப்படாத நிமோனியா காய்ச்சல் " பரவி இருப்பதைகண்டுபிடித்திருப்பதாக தெரிவித்தது. மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா, பசிபிக் நாடுகளில் தட்டம்மை மற்றும் ஆப்கானிஸ்தானில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்டவை டிசம்பர் மாதத்தில் உலக சுகாதார அமைப்பால் உறுதிப்படுத்தப்பட்டது அப்படி உறுதிப்படுத்தப்பட்ட ஒரு டஜன் நோய்களில் இந்த கொரோனாவும் ஒன்று. சீனாவுக்கு வெளியே இது கண்டுபிடிக்கப்படவில்லை ஏன் கவனிக்கப்படவும் இல்லை.

அடுத்த 100 நாட்களில், இந்த வைரஸ் சர்வதேச பயணங்களை மொத்தமாக நிறுத்தி உலகை உறைய வைக்கப்போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. உலகப் பொருளாதாரத்திற்கு அழிவு வரப்போகிறது, மனிதகுலத்தின் பாதியை தங்கள் வீடுகளில் அடைத்து வைக்கப்போகிறது. 10லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மற்றும் ஈரானிய துணைத் தலைவர், நடிகர் இட்ரிஸ் எல்பா மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் மற்றும் பல்வேறு நாட்டு அமைச்சர்கள் உள்பட பலரையும் பாதிக்க போகிறது.

ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் , 75,000 க்கும் அதிகமானோர் இறந்துவிடுவார்கள் என்பதை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் டிசம்பர் மாத இறுதியில் இரவு 11.59 மணி நள்ளிரவு வரை, பட்டாசு வெடித்து, விருந்து உண்டு, மதுஅருந்தி மகிழ்ச்சியில் திளைத்தபடி ஆடிப்பாடி உலகம் முழுவதும் தெருக்களில் குவிந்த மக்கள் இந்த துயரத்தை கற்பனை கூட செய்திருக்க முடியாது.

டிரம்ப் செய்த தவறு.. சீனாவிலிருந்து அமெரிக்கா வந்த 4.3 லட்சம் பேர்.. கொரோனா இப்படித்தான் பரவியதா? டிரம்ப் செய்த தவறு.. சீனாவிலிருந்து அமெரிக்கா வந்த 4.3 லட்சம் பேர்.. கொரோனா இப்படித்தான் பரவியதா?

புதன் 1 ஜனவரி

புதன் 1 ஜனவரி

2010 முதல் 2019 முடியும் வரை பல்வேறு துயரங்கள் மற்றும் மாற்றங்களை இந்த உலகம் பார்த்திருந்தது. பிரிட்டன் நாடு ஐரோப்பாவில் இருந்து வெளியேறும் பிரெக்ஸிட்டையும், மற்ற உலக நாடுகள் சிரிய உள்நாட்டு போர் மற்றும சமூக ஊடக பெருக்கம் போன்றவற்றை பார்த்தன. இதேபோல் தான் இந்த காலக்கட்டத்தில் தான் தேசியவாத சிந்தனைகள் உலகம் முழுவதும் மீண்டும் உயிர் பெற ஆரம்பித்தது. 2020 பிறப்பதற்கான கடைசி சில மணி நேர கவுண்டவுன்கள் தொடங்கும் போது இந்த உலகத்தையே அழிக்க போகும் கொரோனா குறித்து முதல்முறையாக சீனா அறிவித்தது. ஆம் டிசம்பர் 31 ம் தேதி மதியம் 1.38 மணியளவில், சீன அரசு தனது வலைதளத்தில் 1.1 கோடி மக்கள் வசிக்கும் தொழில்துறை நகரமான வுஹானில் தென் சீன கடல் உணவு மொத்த சந்தையைச் சுற்றியுள்ள பகுதியில் "அறியப்படாத நிமோனியா காய்ச்சல் " பரவி இருப்பதைகண்டுபிடித்திருப்பதாக தெரிவித்தது. மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா, பசிபிக் நாடுகளில் தட்டம்மை மற்றும் ஆப்கானிஸ்தானில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்டவை டிசம்பர் மாதத்தில் உலக சுகாதார அமைப்பால் உறுதிப்படுத்தப்பட்டது அப்படி உறுதிப்படுத்தப்பட்ட ஒரு டஜன் நோய்களில் இந்த கொரோனாவும் ஒன்று. சீனாவுக்கு வெளியே இது கண்டுபிடிக்கப்படவில்லை ஏன் கவனிக்கப்படவும் இல்லை.

வியாழன் ஜனவரி 9

வியாழன் ஜனவரி 9

நாள் 9, வியாழன் ஜனவரி 9 : நாவல் கொரோனா வைரஸ் உலகில் முதல்முறையாக அடையாளம் காணப்பட்டது. வுஹானில் நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இரண்டு கொரோனா வைரஸ்கள், சார்ஸ் மற்றும் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (மெர்ஸ்), ஏற்கனவே இந்த நூற்றாண்டில் தொற்றுநோயைத் தூண்டி இருந்தது. இந்நிலையில் புதிய கொரோனா மிகவும் ஆபத்தானது என்பது அப்போது உணரப்பட்டது. ஜனவரி 8ம் தேதி இரவு 61 வயதான ஒருவர் வுஹான் மருத்துவமனையில் இறந்தார். இவர் தான் முதன்முதலாக கொரோனாவால் இறந்ததாக அறியப்பட்டார். அடுத்த நான்கு நாட்களுக்கு புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதேநேரம் புதிய வைரஸை அடையாளம் காணும் விவகாரம் தெஹ்ரானின் புறநகரில் ஏற்பட்ட விமான விபத்து குறித்த ஊகங்களால் மறைக்கப்பட்டது. ஆனால் இந்த தொற்றுநோய் ஒவ்வொரு வாரமும் இரட்டிப்பாக ஆரம்பத்ததை அடுத்த சில நாட்களில் ஆய்வில் தெரிய வந்தது இதேபோல் கொரோனாவை உலகுக்கு சொன்ன கண் மருத்துவரான லி வென்லியாங்கும் கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டார்.

ஜனவரி 13 திங்கள்

ஜனவரி 13 திங்கள்

நாள் 13, ஜனவரி 13 திங்கள்: தாய்லாந்து முதல் முதலாக கொரோனா வைரஸ் பாதித்த ஒருவரை அடையாளம் காண்கிறது. கொரோனாவால் உயிரிழந்த 61 வயதான வுஹான் முதியருடன் சம்பந்தப்பட்டவர் தாய்லாந்து வந்ததால் அந்த பாதிப்பை தாய்லாந்து முதன்முறையாக கண்டுபிடிக்கிறது. பாங்காக் விமான நிலையத்தில் வெப்ப கண்காணிப்பு ஸ்கேனர் மூலம் அதிக வெப்பநிலை கண்டறியப்பட்டது. ஆனால் சீனாவில் அடுத்த சில வாரங்கள் புதிதாக யாருக்கும் பரவியதாக எந்த தகவலும். மனிதனுக்கு மனிதன் பரவுவதாக எந்த ஆதாரமும் இல்லை என்று சீன அரசு அப்போது சொல்லியது. இதை உலக சுகாதார நிறுவனமும் இதே கருத்தை உறுதிசெய்தது. ஆனால் அடுத்த பதினைந்து நாட்களுக்கு பிறகு ஹவுகான் நகரத்தில் உள்ள மருத்துவமனைகள் கடல் உணவு சந்தையுடன் எந்த தொடர்பும் இல்லாத பலர் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.அதி வேகத்தித்தில் கொரோனா பரவியது.

ஜனவரி 20 திங்கள்

ஜனவரி 20 திங்கள்

நாள் 20. ஜனவரி 20 : திங்கள் மனிதனுக்கு மனிதனுக்கு பரவுதல் உறுதிப்படுத்தப்பட்டது. சீன அரசு மருத்துவமனயில் உள்ள முக்கியமான மருத்துவரும் சுவாச நிபுணருமான ஜாங் நன்ஷான் மோசமான செய்திகளுடன் அரசு தொலைக்காட்சியில் தோன்றி பேசுகிறார். இது ஒரு மனிதனிலிருந்து இன்னொரு மனிதனுக்கு பரவும் நோய் என்று உறுதியாக நம்புகிறோம்" என்று ஜாங் தெரிவித்தார். நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. அவர் பேசுவதற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமைக்குள் 139 பேருக்கு பரவியது. பெய்ஜிங் மற்றும் ஷாங்காயிலும் கொரோனா பரவியது. அத்துடன் அடுத்த சில நாட்களில் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வுஹானில் இருந்து திரும்பியவர்களால் கொரோனா பரவ தொடங்கியது. வுகானில் இருந்து வந்த 35 வயது நபர் ஒருவர் இருமல் மற்றும் அதிக காய்ச்சலுடன் அமெரிக்காவின் வாஷிங்டனில் கொரோனாவுடன் மருத்துவமனைக்கு சென்றார். அவர் தான் முதல் அமெரிக்க கொரோனா நோயாளி. இதற்கிடையே வுஹானில் கொரோனா குறித்த பீதி அதிகரித்தது. ஜனவரி 20ம் தேதி 6 மணியளவில், கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் நூற்றுக்கணக்கான நோயாளிகள் நகரின் ஸீஹே மருத்துவமனையில் குவிந்து காத்திருப்பதாக ஊடகங்களில் தகவல் வந்தது.

ஜனவரி 24 வெள்ளிக்கிழமை

ஜனவரி 24 வெள்ளிக்கிழமை

நாள் 24 ஜனவரி 24 வெள்ளிக்கிழமை: சந்திர புத்தாண்டு விடுமுறையையொட்டி, பல லட்சம் சீன மக்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் பார்க்க பயணித்திருந்தனர். இந்நிலலையில் வுஹான் முதல்முறையாக லாக்டவுன் செய்யப்பட்டது . வுகான் நகரத்திற்கு உள்ளேயும் வெளியேயும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது . அங்கு 800 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டு 25 பேர் இறந்திருந்தனர். நோய் பரவுவதை தடுக்கவுகான் நகரம் மொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டது. இது ஒருபுறம் எனில்அன்று தான் முதல்முறையாக
இந்த கொரோனா வைரஸ் ஐரோப்பாவிற்கு வந்து சேர்கிறது, சீனாவிலிருந்து வந்த இரண்டு பேரிடம் இருந்து உறவினர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அவர்களுக்கு பலருடன் தொடர்பு இருந்ததை பிரெஞ்சு அதிகாரிகள் கண்டுபிடித்தனர் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு டாவோஸில் இருந்தபோது டிரம்ப் தனது முதல் ஊடக கேள்வியை கொரோனா வைரஸ் தொடர்பாக பெற்றார். கொரோனா தொற்றுநோயால் கவலைப்படுகிறீர்களா என்று கேட்டதற்கு, அவர் "இல்லவே இல்லை. நாங்கள் அதை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். " என்றார். இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின் பிங் நாடு ஒரு "மோசமான சூழ்நிலையை" எதிர்கொள்கிறது. ஹுபே மாகாணம் முழுவதும் லாக்டவுன் பிறப்பிக்கப்படுகிறது என்றார் . ஹூபேயில் உள்ள சின்ஹுவா மருத்துவமனையின் மருத்துவரான லியாங் வுடோங் உலகிலேயே முதல்முறையாக கொரோனாவால் உயிரிழந்தார்.

ஜனவரி 31 வெள்ளிக்கிழமை

ஜனவரி 31 வெள்ளிக்கிழமை

நாள் 31;. ஜனவரி 31 வெள்ளிக்கிழமை: ஜனவரி 31ம் தேதி இரவு 11 மணிக்கு பிரிட்டன் முறையாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது. அன்று கொரோனா வைரஸுக்கு இது ஒரு மைல்கல் நாள் ஆக உருவெடுத்தது. இங்கிலாந்தில் முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. . ஸ்பெயினும் இத்தாலியும் தங்கள் முதல் கொரோனா பாதிப்பை கண்டுபிடித்தன. "நிலைமை தீவிரமானது, ஆனால் எச்சரிக்கை தேவையில்லை, எல்லாம் முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது" என்று இத்தாலிய சுகாதார மந்திரி ராபர்டோ ஸ்பெரான்சா அன்றைக்கு கூறினார்.

எனினும் அப்போது வரை சீனாவுக்கு வெளியே யாரும் இறக்கவில்லை, ஆனால் சீனாவில் இறப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது, அப்போது 258 ஆக உயிரிழப்பு இருந்தது. 11,000 க்கும் அதிகமானோர் சீனாவில் பாதிக்கப்பட்டு இருந்தனர். அன்றுதான் சீனாவில் இருந்த வெளிநாட்டினருக்குள் நுழைவதை தடை செய்வதாக அமெரிக்கா அறிவித்தது.

பிப்ரவரி 4 செவ்வாய்

பிப்ரவரி 4 செவ்வாய்

நாள் 35. பிப்ரவரி 4 செவ்வாய்: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 20,000த்தை கடந்தது. , 425 பேர் இறந்தனர். கடுமையான நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட வுஹான் குடியிருப்பாளர் ஒருவர் பிலிப்பைன்ஸின் மணிலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் உயிரிழந்தார். இது சீனாவுக்கு வெளியே வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் உயிரிழப்பு ஆகும். இதையடுத்து சீனாவிலிருந்து புதிதாக யாரும் வருவதை பிலிப்பைன்ஸ் தடை செய்தது. உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் கூறுகையில், இந்த நோயின் சர்வதேச பரவல் "குறைந்த மற்றும் மெதுவானதாக" தோன்றுகிறது, இருப்பினும் இது இன்னும் மோசமடையக்கூடும், மேலும் தேவையின்றி வர்த்தகம் மற்றும் பயணத்தை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்றார்.

புதன் 19 பிப்ரவரி

புதன் 19 பிப்ரவரி

நாள் 50. பிப்ரவரி 19 புதன்: தென் கொரியா தேவாலயம் மூலம் கொரோனா பரவியதைகண்டு கவலை அடைந்தது. தென் கொரியாவில் கடுமையான சோதனை மற்றும் விடாமுயற்சியுடன் தொடர்பு தடமறிதல்ஆகியவை மூலம் 31 கொரோனா நோயாளிகளை கண்டறிந்தது. 61 வயதான ஒரு பெண். கொரோனா வைரஸுக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்ற மருத்துவர்களின் ஆரம்ப கோரிக்கைகளை புறக்கணித்து நிகழ்ச்சிகளில்கலந்து கொண்டதால் சுமார் 1160 பேருடன் தொடர்பில் இருந்தை தொடர்பு தடமறிதல் மூலம் கண்டனர். அதன்பிறகுதான் கொரோனா வைரஸ் தென்கொரியாவில் வைரலாக பரவியது. ஈரான் தனது முதல் இரண்டு உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை அறிவிக்கிறது, இரண்டுமே புனித நகரமான கோமில் இருந்தது.

பிப்ரவரி 25 செவ்வாய்

பிப்ரவரி 25 செவ்வாய்

நாள் 56. பிப்ரவரி 25 செவ்வாய்: வைரஸ் உலகளவில் பரவுகிறது. உலகம் முழுவதும் 80,000 த்தை தாண்டியது, முதல் முறையாக, சீனாவுக்கு வெளியே கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களி எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. சீனாவில் 150 பேர் இறந்ததுடன் நோய் தீவிரம் அடைந்தது. இத்தாலி தனது முதல் கொரோனா மரணத்தை அந்த சமயத்தில் தான் செய்தது, இத்தாலியில் 11 பேர் இறந்தனர். வடக்கு இத்தாலி முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டது. ஈரானில் 12 பேர் இறந்திருந்தனர். அன்று தான்அமெரிக்காவில் 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை உறுதி செய்தது. டிரம்ப் இந்தியாவில் இருந்தபடி 14 பேர் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்.

மார்ச் 6 வெள்ளிக்கிழமை

மார்ச் 6 வெள்ளிக்கிழமை

நாள் 66. மார்ச் 6 வெள்ளிக்கிழமை : இங்கிலாந்து முதல் மரணத்தை பதிவு செய்தது. இத்தாலி நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டது. ஆறு நாட்களில் இத்தாலியின் இறப்பு எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகரித்தது. 230 க்கும் மேற்பட்ட இத்தாலியர்கள் இறந்தனர். ஒவ்வொரு நாளும் 1,200 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். 70வயதான பெண் பிரிட்டனில் வைரஸால் இறந்த முதல் நபராகிறார் . போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸ் நோயாளிகளிடம் கை கைகுலுக்கினேன் என்று கூறி அதிரவைத்தார்.

புதன் 11 மார்ச்

புதன் 11 மார்ச்

நாள் 71 மார்ச் 11 புதன்: உலக சுகாதார நிறுவனம் கோவிட் 19ஐ தொற்று நோயாக அறிவித்தது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 1,000 கடந்துவிட்டது மற்றும் உலகளவில் 116,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் இத்தாலியில் இறப்புகள் 168 ஆக அதிகரித்தது. பிரிட்டனில் 456 பேர் கொரோனாவால் பாதிக்கப்படிருந்தனர். இங்கிலாந்து அப்போது லாக்டவுன் அறிவிக்கவில்லை. மாறாக மக்களை சுதந்திரமாக நடமாடவிடுவதன் மூலம் கொரோனா நோய் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி பெறுவார்கள் எனறு நம்பியது

மார்ச் 17 செவ்வாய்

மார்ச் 17 செவ்வாய்

நாள் 77 , மார்ச் 17 செவ்வாய்: உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஐரோப்பிய நாடுகள் அடுத்தடுத்து கட்டுப்பாடுகளை விதித்தன. இத்தாலியில் இறப்புகள் 450 ஐத் தாண்டி வருகின்றன, அதன்பிறகு சீனாவைவிட அதிகமான உயிரிழப்புகளைஇத்தாலி சந்தித்தது. . ஸ்பெயினில் 17,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இந்த நோயால் இறந்தவர்களில் முக்கால்வாசி பேர் ஐரோப்பியர்கள் ஆவர். ஒவ்வொரு மணிநேரமும் கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் அதிவேகமாக இருந்தது. இறப்பு எண்ணிக்கை பல நாடுகளில் அதிகரிக்க தொடங்கியது. ஆப்பிரிக்காவில் முதல் பாதிப்பு உறுதியானது.

மார்ச் 23 திங்கள்

மார்ச் 23 திங்கள்

நாள் 83, மார்ச் 23 திங்கள்: பிரிட்டன் லாக்டவுன் உத்தரவை வெளியிட்டது. உலகெங்கிலும் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்பு எண்ணிக்கை 370,000 ஐ தாண்டிவிட்டன. பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், அத்தியாவசியமற்ற அனைத்து வணிக வளாகங்களை மூடுமாறு கட்டளையிட்டு, நாட்டை வலியுறுத்துகிறார்: "நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்." என்று அவர் வலிறுத்துகிறார். பிரிட்டனில் அப்போது 6,600 க்கும் மேற்பட்டோருக்கு பரவி இருந்தது. அடுத்த நாள் மார்ச் 24ம் தேதி இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கிறார். ஸ்பெயினில் கிட்டத்தட்ட 400 பேர் இறக்கின்றனர், நியூயார்க்கில் 5,000 க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டனர். அந்த வார இறுதியில் அமெரிக்காவில் உலகிலேயே அதிக தொற்றுநோய்கள் ஏற்பட ஆரம்பித்தது. ஆனால் சீனாவில் குறைய ஆரம்பித்தது. உள்நாட்டில் அங்கு யாரும் பாதிக்கப்படவில்லை.

ஏப்ரல் 2 வியாழன்

ஏப்ரல் 2 வியாழன்

நாள் 93, ஏப்ரல் 2 வியாழன்: மற்றொரு கடுமையான மைல்கல்லை கொரோனா கடந்தது. ஏப்ரல் 2ம் தேதி இரவு 8.40 மணியளவில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில 10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை உறுதி செய்தது, 50,000 க்கும் மேற்பட்டோர் இறந்தையும் உறுதி செய்தது. . பிரட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்தியாவில், மும்பையின் பரந்த சேரிப் பகுதியும், பூமியில் அதிக மக்கள் தொகை கொண்ட இடமான தாராவியில் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஏப்ரல் 2ம் தேதி இந்தியாவில் 2,069 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஸ்பெயினில் இறப்புகள் ஒரே நாளில் 950 ஐ தாண்டியது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 2.5லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 6,000 இறப்புகள் பாதிவாகி இருந்தது. மிகவும் வேதனையான இரண்டு வாரங்கள் அடுத்து வரப்போகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த சில நாட்களில் எச்சரிக்கிறார்.

ஏப்ரல் 8 புதன்

ஏப்ரல் 8 புதன்

நாள் 99, ஏப்ரல் 8 புதன்: பிரட்டன் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் மோசமடைந்ததால் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். ஐரோப்பாவின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான சில நாடுகளில், கொரோனா பரவும் வேகமும் இறப்புகளும் வீழ்ச்சியடைகின்றன. சீனாவின் அன்றைக்கு கொரோனாவால் முதல்முறையாக யாருமே இறக்கவில்லை என்று பதிவு செய்கிறது.அத்துடன் வுகானில் லாக்டவுனை விலக்குகிறது. சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. உலகளவில் மொத்தம் 75,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 13லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 270,000 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து மீண்டுள்ளனர். ஆனால் கொரோனாவில் இருந்து வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது குறித்து எந்த அறிகுறியும் உலகில் இதுவரை இல்லை.

English summary
Exactly 100 days ago Coronavirus was identified: and how the world changed in these 100 days! It turned into a pandemic that has transformed life as we know it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X