இது டிரெயிலர்தான்.. "கெத்து மோடி".. வளரும் இந்தியாவை பின்தொடரும் "வல்லரசு".. உலகை ஈர்க்கும் போட்டோ
டெல்லி: குவாட் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள நம் பிரதமர் மோடியின் போட்டோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. என்ன காரணம்?
இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளும் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் முதல் உச்சி மாநாடு, கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்றது..
ஆனால், கொரோனா பரவல் இருந்ததால், வீடியோ கான்பரன்ஸ் மூலம்தான் அந்த மாநாடு நடத்தப்பட்டது.. அதேபோல, 2-வது உச்சி மாநாடு, கடந்த செப்டம்பரில் வாஷிங்டனில் நடைபெற்றது.. அப்போதும் இந்த 4 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

குவாட்
இப்போது குவாட் அமைப்பின் 3-வது உச்சி மாநாடு ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது... இதிலும் 4 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.. முன்னதாக, இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு, ஜப்பான் பிரதமர், நம் பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தார்... அந்த அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்.. இந்த மாநாடு நம் பிரதமருக்கு மிக முக்கியமான மாநாடாகும்.

பலப்படுத்தும் உறவு
காரணம், அமெரிக்காவுடனான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பன்முக ஒத்துழைப்பு, பாதுகாப்பில் கூட்டுறவு, இந்தோ-பசிபிக் பகுதியில் பகிரப்பட்ட முன்னுரிமைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த போவதாக பிரதமர் மோடி முன்னதாகவே தெரிவித்திருந்தார். மேலும், ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் அதன் விளைவுகள் குறித்தும் குவாட் மாநாட்டில் பிரதமருடன் பிற நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளதாக எதிபார்க்கப்படுகிறது.

ஜனநாயக சக்தி
இந்நிலையில், 4 நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ள குவாட் உச்சி மாநாடு இன்று காலை தொடங்கியது... இதில் பேசிய பிரதமர் மோடி, "குறுகிய காலத்தில் உலகில் குவாட் அமைப்பு தனக்கென ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது.. குவாட்டின் தொலைநோக்கு பார்வை இன்று விரிவடைந்துள்ளது. அதன் செயல்முறை சிறந்த வடிவம் பெற்றுள்ளது... நம்முடைய பரஸ்பர நம்பிக்கை மற்றும் மனவுறுதி ஆகியவை ஜனநாயக சக்திகளுக்கு புதிய ஆற்றலும் மற்றும் ஆர்வமும் அளிக்கிறது" என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

கம்பீரமான நடை
இதனிடையே, பிரதமர் மோடியின் ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த அதிபர் மற்றும் பிரதமர்கள் ஒன்றாக சேர்ந்து புறப்பட்டனர்.. அப்போது எடுத்த போட்டோ இது.. ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர்களை, நம்முடைய பாரத பிரதமர் மோடி வழிநடத்தி செல்வதை போல இருக்கிறது.. அவர்களுக்கு முன்பாக, கெத்தாக & கம்பீரமாக நடைபோட்டு கிளம்புகிறார்.

மோடி டிரஸ்
மோடியை பின்தொடர்ந்து அவர்கள் நடந்து வருகிறார்கள்.. உலகின் வல்லரசான அமெரிக்க அதிபரே, நம் பிரதமருக்கு பின்னாடிதான் சென்று கொண்டிருக்கிறார்.. இது யதேச்சையாக நடந்த ஒன்று என்றாலும், உலக அளவில் பிரதமர் மோடி ஈர்க்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.. அதுமட்டுமல்லாமல், மோடியின் டிரஸ் எப்போதுமே உலக நாடுகளால் உற்று கவனிக்கப்பட்டு வருவது இயல்பான ஒன்று..

வெள்ளை ஜுப்பா
அந்த வகையில், இப்போதும் ஸ்மார்ட் லுக்குடன் காணப்படுகிறார்.. மற்ற தலைவர்கள் எல்லாம் கோட் - சூட் அணிந்திருக்க, நம் பிரதமர் மட்டும் வேஸ்கோட் - வெள்ளை ஜுப்பா அணிந்து மிடுக்காக நடந்து செல்கிறார்.. இந்த போட்டோ இணையத்தில் வைரலாவதை பார்த்து, பாஜகவினர் புல்லரித்து போய்விட்டனர்.. வளர்ந்த நாடுகளையே, இந்தியா முன்னெடுத்து செல்கிறதே என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்..!