டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவிற்கு மட்டும்தான் குட் நியூஸ்.. மோடிக்கு ரொம்ப பேட் நியூஸ்.. எக்ஸிட் போலால் அதிர்ச்சியில் நமோ?

நேற்று வெளியான எக்ஸிட் போல் கருத்து கணிப்புகள் பாஜகவிற்கு நல்ல செய்தியை கொடுத்து இருந்தாலும் பிரதமர் மோடி இதனால் அதிர்ச்சியில் இருப்பதாக கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரதமராகிறாரா நிதின் கட்காரி? ஆர்.எஸ்.எஸ். அவசர ஆலோசனை!

    டெல்லி: நேற்று வெளியான எக்ஸிட் போல் கருத்து கணிப்புகள் பாஜகவிற்கு நல்ல செய்தியை கொடுத்து இருந்தாலும் பிரதமர் மோடி இதனால் அதிர்ச்சியில் இருப்பதாக கூறுகிறார்கள்.

    நேற்றுதான் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. ஒரு மாதமாக இந்திய அரசியலை புரட்டிப் போட்ட தேர்தல் தற்போது சுமுகமாக முடிந்துள்ளது.

    தேர்தல் முடிந்ததை அடுத்து நேற்று நிறைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது. 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் கருத்து கணிப்புகளை நேற்று வெளியிட்டது.

    முடிகிறது மோடி சகாப்தம்? பிரதமராகிறாரா நிதின் கட்காரி? ஆர்.எஸ்.எஸ். அவசர ஆலோசனை! முடிகிறது மோடி சகாப்தம்? பிரதமராகிறாரா நிதின் கட்காரி? ஆர்.எஸ்.எஸ். அவசர ஆலோசனை!

    என்ன முடிவு

    என்ன முடிவு

    கருத்து கணிப்புகளின்படி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 303 இடங்கள் வரை சராசரியாக வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 115 இடங்களை வெல்லும். பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி கூட்டணி 36 இடங்களை வெல்லும். மற்ற மாநில கட்சிகள் 111 இடங்களை வெல்லும் என்கிறார்கள்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் எதிலும் பாஜக தனியாக மெஜாரிட்டி பெறுவதாக கூறவில்லை. பாஜக சென்ற முறை போல தனித்து மெஜாரிட்டி பெற முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் உதவியுடன் மட்டும்தான் பாஜக இந்த தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

    சக்திகள்

    சக்திகள்

    இதனால் பாஜக கூட்டணியில் உள்ளது சிவசேனா, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் முக்கிய கட்சிகளாக உருவெடுத்து இருக்கிறது. இவர்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்களே ஆட்சி அரியணையில் பாஜக சார்பாக அமர முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இதுதான் தற்போது மோடிக்கு பேட் நியூஸாக மாறி இருக்கிறது.

    எப்படி மாறி உள்ளது

    எப்படி மாறி உள்ளது

    ஏனென்றால் சிவசேனா, நிதிஷா குமார் இரண்டு பேரும் மோடிக்கு ஆதரவு அளிக்க கூடிய நபர்கள் கிடையாது. சிவசேனா கட்சிக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்து இருந்தாலும், மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை அதிக முறை எடுத்து இருக்கிறது. அதே சமயம், நிதிஷ் குமார் நேரடியாக மோடி எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார்.

    நிதிஷ் குமார் எப்படி

    நிதிஷ் குமார் எப்படி

    முக்கியமாக நிதிஷ் குமார் பீகாரில் அதிக இடங்களை வெல்வார் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இவர் அதிக இடங்களை வெல்லும்பட்சத்தில், அது மோடிக்கு இன்னும் பெரிய தலைவலியாக மாறும். நிதிஷ் குமார் யாரை சொல்கிறாரோ அவரே பாஜகவின் பிரதமராகும் நிலை ஏற்படும்.

    மோடிக்கு எப்படி சிக்கல்

    மோடிக்கு எப்படி சிக்கல்

    இதனால் தேர்தலில் பின்வரும் எந்த முடிவுகள் வந்தாலும், மோடிக்கு சிக்கல் மட்டுமே ஏற்படும் என்று கூறுகிறார்கள்.

    பாஜக கூட்டணி பெரும்பான்மை பெறவில்லை என்றால் மோடி வீட்டிற்கு செல்ல வேண்டி இருக்கும்.

    பாஜக தனி பெரும்பான்மை பெறாமல் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்றாலும் மோடி பிரதமராக முடியாது.

    பாஜக தனி பெரும்பான்மை பெற்றாலும் கூட,பாஜக வேறு ஒரு தலைவரை பிரதமராக்க முயலும் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Exit poll results are not a good sign for PM Narendra Modi: NDA allies may stand against him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X