டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவை உற்சாகத்தில் மூழ்கடித்த எக்ஸிட் போல்.. இது மக்கள் கருத்தில்லை.. டேக் இட் ஈஸி காங்கிரஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக கூட்டணிக்கே வெற்றி ! சி வோட்டர் அதிரடி கணிப்பு!

    டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு வழக்கம் போல் அரசியல் கட்சிகளிடையே ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளன. கருத்துக்கணிப்புகள் தங்களுக்கு சாதகமாக வந்திருப்பதால், உற்சாக வெள்ளத்தில் மிதக்கும் பாரதிய ஜனதா இது மக்களின் மனநிலையே பிரதிபலிப்பதாக கூறியுள்ளது.

    நேற்று மாலை முதல் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. நாட்டின் பெரும்பாலான பிரபல ஊடகங்கள் வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவுகளில், பாரதிய ஜனதா ஆட்சியை தக்க வைக்கும் என குறிப்பிட்டுள்ளன.

    Exit poll Results are not reflected in the real Field.. situation congress comment

    மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என மக்கள் விரும்புவதையே இந்த முடிவுகள் காட்டுவதாக பாஜக கூறியுள்ளது. இது பற்றி பேசிய பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஷா நவாஸ் உசைன், நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்பார்.

    மக்களின் விருப்பமும் அதுவாகத்தான் அமைந்துள்ளது என்பதையே இந்த எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிப்பதாக கூறினார். கடந்த முறையை போலவே இந்த முறையும் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    பாரதிய ஜனதாவுடன் மல்லுகட்டும் காங்கிரஸ் கட்சியோ, கருத்து கணிப்பு முடிவுகளை நிராகரித்துள்ளது. எக்ஸிட் போல் முடிவுகள் பெரும்பாலும் களநிலவரத்திற்கு முற்றிலும் முரணாக இருப்பதாக அக்கட்சி கூறியுள்ளது.

    தேர்தல் கணிப்புகளால் திடீர் மாற்றம்.. ராகுல், சோனியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மாயாவதி தேர்தல் கணிப்புகளால் திடீர் மாற்றம்.. ராகுல், சோனியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மாயாவதி

    எக்ஸிட் போல் முடிவுகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரண்சிங் சோப்ரா, தொலைக்காட்சிகளில் விவாதிக்கப்படுவதை காட்டிலும் களத்தில் உள்ள நிலவரம் முற்றிலும் வேறுபாடுகளை கொண்டுள்ளது.

    உண்மை களநிலவரத்தை பிரதிபலிப்பதாக எக்ஸிட் போல் முடிவுகள் இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். கருத்து கணிப்பு புரளிகள் மூலம் வாக்கு இயந்திரங்களை மாற்றுவது அல்லது முறைகேடுகளில் ஈடுபடுவது என்பதே, பாரதிய ஜனதாவின் திட்டம் என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    As usual for parliamentary election opinion polls, political parties have been supportive and opposed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X