டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களவை தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட தொகுதிளில் பாஜக முன்னிலை

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok sabha Elections 2019: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு போலத்தான் முடிவுகள் வந்துள்ளது- வீடியோ

    டெல்லி: ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவின் உச்சகட்ட காட்சிகள் இன்று அரங்கேறி வரும் நிலையில், நாடு முழுவதும் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 மக்களவை தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.

    Content length Minimum 300 Characters

    543 தொகுதிகளில் சுமார் 437 தொகுதிகளில் பாரதிய ஜனதா போட்டியிட்டுள்ளது. அதே போல காங்கிரஸ் கட்சி 421 மக்களவை தொகுதிகளில் களம் கண்டுள்ளது.

    கடந்த ஞாயிற்று கிழமையன்று வெளியிடப்பட்ட எக்ஸிட் போல் முடிவுகளில், பாரதிய ஜனதா கூட்டணிக்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கம் என்று கூறப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 120 முதல் 150 இடங்கள் வரையே கிடைக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின.

    இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெற்று வரும் நிலையில், நாடு முழுவதும் பாரதிய ஜனதா கூட்டணி சுமார் 210-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    காங்கிரஸ் கூட்டணி 90-க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே தற்போது வரை முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமிழந்து காணப்படுகின்றனர்

    எக்ஸிட் போல் முடிவுகளின் படி தான் தேர்தல் முடிவுகள் அமைய போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

    English summary
    The Bharatiya Janata-led National Democratic Alliance (NDA) has emerged as the leader in more than 200 seats across the country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X