டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யார் ஜெயிக்கப் போறாங்களோ.. எது நடக்கப் போகுதோ இல்லையோ.. இருக்கு.. இது மட்டும் கண்டிப்பா இருக்கு!

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பார்க்கும் போது நிச்சயம் குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது என்றவுடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜக அரசை எப்படி வீட்டுக்கு அனுப்பலாம் என ஆலோசனை நடத்தி வந்தன. இந்த நிலையில் தேர்தலும் வந்தது.

மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தல் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. இதன் முடிவுகள் வரும் 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்த முடிவுகளை அரசியல் கட்சிகளுடன் மக்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கூட்டணி

கூட்டணி

நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க ஒரு கட்சியானது 272 இடங்களை பெற்றிருக்க வேண்டும். இதற்கு கீழ் பெறும் கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கி ஆட்சி அமைப்பது வழக்கம்.

கணிப்புகள்

கணிப்புகள்

இந்த நிலையில் நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்றே கணிப்புகள் கூறுகின்றன.

பாஜக ஆட்சி

பாஜக ஆட்சி

இதில் சிஎன்என், ரிபப்ளிக் சி வோட்டர், ரிப்ளிக் ஜான்கி பாத், நியூஸ் நேஷன், டைம்ஸ் நவ் ஆகிய நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 282 முதல் 336 தொகுதிகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நடந்தால் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பாஜகவுக்கு பெரும்பான்மை

பாஜகவுக்கு பெரும்பான்மை

ஒரு வேளை நியூஸ் எக்ஸ் நேட்டா, ஏபிபி எசி நீசன் ஆகிய நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பின்படி பாஜகவுக்கு முறையே 242, 267 இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஜனாதிபதி

ஜனாதிபதி

இந்த சூழலில் அதிக இடங்களை பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைப்புவிடுப்பார். ஆயினும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க பெரும்பான்மையை காண்பித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும். இதையடுத்து முடிவு ஜனாதிபதி கையில்தான் உள்ளது.

அரங்கேறும்

அரங்கேறும்

இதுபோன்ற சூழலில் அதாவது தனிபெரும்பான்மை கிடைக்காத சூழலில் எம்பிக்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் எத்தனை எம்பிக்கள் அணி தாவுவார்களோ. சுருக்கமாக சொல்லபோனால் கூவத்தூர் கூத்துகள் இங்கு அரங்கேறும் என்பதில் சந்தேகமே இல்லை.

English summary
All Exit poll survey results which releases yesterday says that there will be horse trading occurs after election results if none get simple majority.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X