டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹரியானாவில் பாஜக அபாரம்- காங்கிரஸ் படுதோல்வி முகம்: எகிஸ்ட் போல் முடிவுகள் ’கறார்’

Google Oneindia Tamil News

டெல்லி: ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக இம்முறை அபார வெற்றியை பெறும் என்றும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைத் தழும் என்கின்றன தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்.

90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டசபைக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. இத்தேர்தலின் தொடக்கம் முதலே காங்கிரஸின் உட்கட்சி குழப்பம், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இல்லாதது ஆகியவை பாஜகவுக்கு சாதகம் என்றே கூறப்பட்டது.

அதேபோல் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளும் பாஜக நிச்சயம் அமோக இடங்களில் வெல்லும்; காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியைத் தழுவும் என கூறப்பட்டது. தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் அத்தனையுமே பாஜக மிக அதிகமான இடங்களையே கைப்பற்றும் என தெளிவாக தெரிவித்துள்ளன.

காணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி - சி வோட்டர் கணிப்பு!காணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி - சி வோட்டர் கணிப்பு!

பாஜகவுக்கு 75 இடங்கள்

பாஜகவுக்கு 75 இடங்கள்

இந்தியா நியூஸ், Pollstrat கருத்து கணிப்புகளில் பாஜகவுக்கு 75 முதல் 80 இடங்கள் வரை கிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 9 முதல் 12 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது எக்ஸிட் போல். இதர கட்சிகளுக்கு 1 இடம்தானாம்.

நியூஸ்18- IPSOS-ன் முடிவுகள்

நியூஸ்18- IPSOS-ன் முடிவுகள்

நியூஸ்18- IPSOS-ன் எக்ஸிட் போல் முடிவுகளும் மேற்கண்டதையே வழிமொழிந்திருக்கிறது. பாஜகவுக்கு 75 இடங்கள் கிடைக்கும் என்கிறது. காங்கிரஸுக்கு 10 தொகுதிகள்தானாம். இதர கட்சிகளுக்கு 5 என்கிறது இந்த முடிவுகள்.

டைம்ஸ்நவ் எக்ஸிட் போல்

டைம்ஸ்நவ் எக்ஸிட் போல்

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் எக்ஸிட் போல் முடிவுகள் பாஜகவுக்கு 71 இடத்தை கொடுத்திருக்கிறது. காங்கிரசுக்கு 11 இடங்கள்தான் கிடைக்குமாம். இதர கட்சிகளுக்கு 8 இடங்கள் கிடைக்கலாம் என்கிறது டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு.

பாஜக வெற்றி உறுதி

பாஜக வெற்றி உறுதி

3 எக்ஸிட் போல் முடிவுகளின் அடிப்படையில் பாஜகவுக்கு 68; காங்கிரஸுக்கு அதிகபட்சம் 13 என்கின்றன தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்புகள். இதர கட்சிகளுக்கு 10 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசல்தான் வெற்றியை பாஜகவுக்கு அப்படியே தாரை வார்த்து கொடுக்கிறது.

ஏபிபியும் 72 இடமாம்

ஏபிபியும் 72 இடமாம்

அதேபோல் ஏபிபி சிவோட்டர் எக்ஸிட் போல் முடிவுகளும் பாஜகவுக்கு 72 இடங்களைத் தந்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 8; இதர கட்சிகளுக்கு 10 என்கிறது இந்த முடிவுகள்.

காங்கிரஸ் எதிர்காலம்?

காங்கிரஸ் எதிர்காலம்?

இனி இந்த மாநிலத்தில் காங்கிரஸின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது. காங்கிரஸ் கட்சி பிற எதிர்க்கட்சிகளை அரவணைத்து வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் காப்பாற்றாமல் போனாமல் இருக்கிற இடமும் கூட தெரியாமலேயே போய்விடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

தனித்து வெல்லும் பாஜக

தனித்து வெல்லும் பாஜக

மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. ஹரியானாவில் பாஜக தனியே ஆட்சியை தக்க வைக்கிறது.

English summary
According to the Exit Poll sources BJP to retain Haryana state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X