டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவை விரட்ட.. மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.. முதல்வர்களுடனான ஆலோசனையில் மோடி பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட 15 மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து 21 மாநில முதல்வர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடன் நேற்று காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இரண்டாம் நாளான இன்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட பெரிய மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர்.

Expansion of health infrastructure should be our utmost priority to tackle corona, says Narendra Modi

முதல்வர்களுடனான ஆலோசனையில் பேசிய, பிரதமர் நரேந்திர மோடி, "கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுகாதார உள்கட்டமைப்பை விரிவாக்குவது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

இந்தியாவை சீண்டினால் தக்க பதிலடி தரப்படும்.. வீரர்களின் தியாகம் வீணாகாது..பிரதமர் மோடி எச்சரிக்கை!இந்தியாவை சீண்டினால் தக்க பதிலடி தரப்படும்.. வீரர்களின் தியாகம் வீணாகாது..பிரதமர் மோடி எச்சரிக்கை!

"ஒவ்வொரு கொரோனா நோயாளியும் சரியான சிகிச்சையைப் பெற வேண்டும். இதற்காக நாம் பரிசோதனையை அதிகரிக்க வலியுறுத்த வேண்டும், இதனால் பாதிக்கப்பட்ட நபரை கண்டுபிடிக்கவும் மற்றும் தனிமைப்படுத்தவும் முடியும்," என்று அவர் கூறினார்.

Expansion of health infrastructure should be our utmost priority to tackle corona, says Narendra Modi

"3 மாதங்களுக்கு முன்பு, உலகெங்கிலும் தனி நபர் பாதுகாப்பு கவச உடைகள், கொரோனா கண்டறியும் கருவிகளின் பற்றாக்குறை இருந்தது. இந்தியாவிலும், குறைவாகத்தான் இருந்தது. ஏனெனில் நாம் இறக்குமதியை முழுமையாக நம்பியிருந்தோம். ஆனால் இன்று, 1 கோடிக்கும் அதிகமான பிபிஇ கருவிகளும் அதே எண்ணிக்கையிலான N95 முகக் கவசங்களும் மாநிலங்களை அடைந்துள்ளன, " இவ்வாறு மோடி பேசினார்.

இதையடுத்து மாநில முதல்வர்கள் கருத்துக்களை அவர் கேட்டறிந்து வருகிறார்.

English summary
In the meeting with chief ministers on Wednesday, Prime Minister Narendra Modi said that "with increase in number of corona patients,expansion of health infrastructure should be our utmost priority".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X