"இது மட்டும் நடந்தால் போதும்.. எண்டமிக் நிலையை கொரோனா அடைந்துவிடும்.." நம்பிக்கை தரும் வைராலஜிஸ்ட்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், வைரஸ் பாதிப்பு எப்போது எண்டமிக் நிலையை அடையும் என்பது குறித்து ஐசிஎம்ஆர் முன்னாள் தலைவரும் நாட்டின் முக்கிய வைராலஜிஸ்ட்களில் ஒருவரான டாக்டர் டி ஜேக்கப் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கொரோனா பரவ தொடங்கி 2 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இப்போதும் கூட உலகில் எந்தவொரு நாடும் வைரஸ் பாதிப்பை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை.
3 பேர்.. ஸ்டாலினுக்கு வந்த போன்.. அடுத்த மூவிற்கு ரெடியான மம்தா.. வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு?
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், அதை முற்றிலுமாக அழிப்பது என்பது முடியாத ஒன்றாக உள்ளது. வேக்சின் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வரும் நாடுகளில் மட்டுமே பாதிப்பு சற்று குறைவாக உள்ளது.

இந்தியா
இந்தியாவைப் பொருத்தவரை கடந்த டிச. - ஜனவரி மாதங்களில் ஓமிக்ரான் கொரோனா காரணமாக வைரஸ் பாதிப்பு உச்சம் தொட்டது. இருப்பினும், அதன் பின்னர் படுவேகமாக குறையத் தொடங்கிய ஓமிக்ரான் கொரோனா, இப்போது கிட்டதட் முற்றிலுமாக கட்டுக்குள் வந்துவிட்டது என்றே கூறலாம். இந்நிலையில், சில ஆய்வாளர்கள் கொரோனா எண்டெமிக் என்ற ஆபத்து இல்லாத நிலையை அடைந்துவிட்டதாகத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் முக்கிய வைராலஜிஸ்ட்களில் ஒருவரான டாக்டர் டி ஜேக்கப் ஜான் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

எண்டமிக் நிலை
கொரோனா எப்போது எண்டமிக் நிலையை அடையும் என்பது குறித்துப் பேசிய டாக்டர் டி ஜேக்கப் ஜான், "அடுத்து 4 வாரங்கள் நமக்கு மிக மிக முக்கியம். வரும் 4 வாரங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைய வேண்டும். அப்படி இல்லை என்றால், கொரோனா எண்டமிக் நிலையை எட்டிவிட்டது என்று நம்மால் கூற முடியாது. அந்த எண்டமிக் நிலையிலேயே கொரோனா வைரஸ் குறைந்தது பல மாதங்கள் நீடிக்கும். அதே நேரம் இடைப்பட்ட காலத்தில் ஓமிக்ரான் வகையை விட வேகமாகப் பரவும் அல்லது டெல்டா கொரோனாவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் உருமாறிய கொரோனா வகை உருவாகும் வாய்ப்புகளும் அதிகம்" என்று அவர் தெரிவித்தார்.கொரோனா எப்போது எண்டமிக் நிலையை அடையும் என்பது குறித்துப் பேசிய டாக்டர் டி ஜேக்கப் ஜான், "அடுத்து 4 வாரங்கள் நமக்கு மிக மிக முக்கியம். வரும் 4 வாரங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைய வர வேண்டும். அப்படி இல்லை என்றால், கொரோனா எண்டமிக் நிலையை எட்டிவிட்டது என்று நம்மால் கூற முடியாது. அந்த எண்டமிக் நிலையிலேயே கொரோனா வைரஸ் குறைந்தது பல மாதங்கள் நீடிக்கும். அதே நேரம் இடைப்பட்ட காலத்தில் ஓமிக்ரான் வகையை விட வேகமாகப் பரவும் அல்லது டெல்டா கொரோனாவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் உருமாறிய கொரோனா வகை உருவாகும் வாய்ப்புகளும் அதிகம்" என்று அவர் தெரிவித்தார்.

எண்டமிக் என்றால் என்ன
இந்தியாவில் இப்போது கொரோனா 3ஆம் அலை தொடர்ந்து குறைந்தே வருகிறது. கடந்த ஜன.21ஆம் தேதி 3,47,254 வரை தினசரி கொரோனா பாதிப்புகள் சென்ற நிலையில், அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. குறிப்பாகக் கடந்த 10 நாட்களாகவே மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் கீழாகவே பதிவாகி வருகிறது. இது குறித்து டாக்டர் டி ஜேக்கப் ஜான் கூறுகையில், "ஒரு நாட்டில் வைரஸ் பரவல் திடீரென அதிகரிக்கும் போது அதை outbreak என்று அழைக்கிறோம். அதேநேரம் குறிப்பிட்ட காலத்திற்கு வைரஸ் பாதிப்பு தொடர்ந்து ஒரே நிலையில் இருந்தால் அதை நாம் எண்டமிக் எனக் குறிப்பிடலாம்.

4 வாரங்கள்
புதிய புதிய உருமாறிய வைரஸ்கள் காரணமாக கொரோனா அலைகள் அடுத்தடுத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே 4 வாரங்கள் தொடர்ந்து கொரோனா வைரஸ் கேஸ்கள் குறைய வேண்டும். அப்படி இல்லாத சூழலில் அதை எண்டமிக் என்று அழைக்க முடியாது. ஓமிக்ரான் அலை மிக வேகமாகக் குறைந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் ஓமிக்ரான் கொரோனா மேலும், குறையலாம், ஆனால், எண்டமிக் முடியும் நிலையை எட்டிவிட்டதா என்பதை உறுதிப்படுத்த நமக்குக் குறைந்தது 4 வாரங்கள் தேவை,

உருமாறிய கொரோனா
வரும் காலத்தில் என்ன நடக்கும் என்று நம்மால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால் கடந்த காலத்தில் நடந்ததை வைத்து சிலவற்றை நாம் எதிர்பார்க்கலாம். அடுத்த சில மாதங்களுக்கு எந்தவொரு உருமாறிய கொரோனாவும் இல்லாமல் இருக்கும். ஆனால். அதன் பின்னர் ஓமிக்ரானை விட வேகமாகப் பரவும், டெல்டாவை விடத் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் உருமாறிய கொரோனா தோன்றலாம். ஆனால், இதையும் கூட நம்மால் உறுதியாகக் கூற முடியாது. ஓமிக்ரான் கொரோனா எப்படி நம்மை ஆச்சரியப்படுத்தியதோ அதே போல அடுத்த உருமாறிய கொரோனா கூட ஆச்சரியத்தைத் தரலாம். அதேநேரம் எண்டமிக் நிலையில் கூட வைரஸ் பாதிப்பு ஏற்படும். சிலர் உயிரிழக்கும் சூழல் கூட உருவாகும்

வேக்சின்
அதேநேரம் வேக்சின் பணிகளை நாம் இன்னும் வேகப்படுத்த வேண்டும். போதிய அளவு வேக்சின் பணிகளை நாம் மேற்கொள்ளவில்லை என்றால் சில மாதங்களுக்கு ஒரு முறை சிறிய கொரோனா அலைகள் ஏற்படலாம். எனவே, வேக்சின் பணிகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும். இப்போது நம்மிடம் தடுப்பூசிகள் உள்ளன. தற்போது நமது முதல் வேலை அனைவருக்கும் 2 டோஸ் வேக்சின் அளிக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு பூஸ்டர் டோஸ் அளிக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே நம்மால் கொரோனா அலைகளின் பாதிப்பைக் குறைக்க முடியும்" என்று அவர் குறிப்பிட்டார்.