டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொய்யான பிரச்சாரங்களா... வெறுப்புணர்வை தூண்டும் பதிவா… பேஸ்புக் கண்காணிக்கிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Whatsapp New Update: வாட்ஸ் ஆப்பில் கடைசியாக அந்த அப்டேட் வந்துடுச்சு- வீடியோ

    டெல்லி: மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் போலியான செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் பேஸ்புக் தனி குழு அமைத்துள்ளது.

    பொய்யான பிரச்சாரங்கள், வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை கண்காணிக்க இந்தியாவுக்கு என தனியாக ஒரு குழுவை பேஸ்புக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த குழு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து கண்காணித்து வருகிறது.

    Facebook has set up a separate group to prevent false propaganda related to the Lok Sabha elections

    மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, சமூக அமைதியையும் சீர்குலைப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு என தனிக் குழுவை பேஸ்புக் நிறுவனம் அமைத்துள்ளது. இதற்கிடையே, பேஸ்புக் செயலியில் தரமான மற்றும் நம்பகமான செய்திகளை பயனர்களுக்கு வழங்கும் விதமாக புதிய வசதியை ஒன்றை உருவாக்க உள்ளதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் தெரிவித்திருக்கிறார்.

    இதற்கென தனி ஊடகவியலாளர்களை நியமிக்க போவதில்லை என தெரிவித்த அவர், தொழில் முறையில் இயங்கி வரும் நம்பகமான ஊடகங்களிடம் செய்திகளைப் பெற்று, பிரத்தியேகமான முறையில் வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

    போலிச் செய்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக உலா வரும் நிலையில், பேஸ்புக்கில் இந்த முடிவுக்கு வந்துள்ளதற்கு, சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Facebook has set up a separate group to prevent the spread of fake news on social networks
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X