டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பஜ்ரங் தள பக்கத்தை தடை செய்ய வேண்டியதில்லை".. நாடாளுமன்ற குழுவிடம் "பேஸ்புக்" நிர்வாகிகள் விளக்கம்

பேஸ்புக் இந்தியா தலைவர் அஜித் மோகன் விளக்கம் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

புதுடில்லி: "இதுவரை பஜ்ரங் தளம் வெளியிட்டுள்ள பதிவில், எங்களின் சமூக ஊடக கொள்கைகளை மீறும் எந்தவொரு காரணத்தையும் கண்டுபிடிக்கவில்லை.. அதனால், அதை தடை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.. நாங்கள் யாருக்கும் சாதகமாக செயல்படவும் இல்லை" என்று பாராளுமன்ற நிலைக்குழு முன் ஆஜரான பேஸ்புக் இந்தியா தலைவர் அஜித் மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஜுன் மாதம் பஜ்ரங்கள் அமைப்பினர் ஒரு சர்ச் மீது தாக்குதல் நடத்தினர்... பஜ்ரங்தள் வெளியிட்ட மதவெறுப்பு நிறைந்த அந்த வீடியோவை 2.5 லட்சம் பேர் பார்த்தனர்.. ஆனாலும், ஃபேஸ்புக் அதன்மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒருவேளை பஜ்ரங்தள் மீது நடவடிக்கை எடுத்தால், இந்தியாவில் தமது நிறுவன ஊழியர்களுக்கும், தொழில் நடவடிக்கைகளுக்கும் ஆபத்து ஏற்படலாம் என்பதால்தான், ஃபேஸ்புக் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று வால் ஸ்ட்ரீட் காரணம் சொன்னது.

மீண்டும் ரவுண்டு கட்ட போகும் மழை.. இன்று இந்த 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. ஜில் அறிவிப்புமீண்டும் ரவுண்டு கட்ட போகும் மழை.. இன்று இந்த 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. ஜில் அறிவிப்பு

 பாதிப்பு

பாதிப்பு

ஃபேஸ்புக் செயல்படும் பல நாடுகளில் அதற்கு ஊழியர்கள் இல்லை... ஆனால், இந்தியாவிலோ ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 5 ஆபீஸ்கள் உள்ளன.. அங்கு நூற்றுக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர்.. அந்த ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால்தான் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஃபேஸ்புக் தரப்பு சொன்னதாக செய்திகள் கசிந்தன.

 வால் ஸ்ட்ரீட்

வால் ஸ்ட்ரீட்

இதனிடையே, அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையில், பேஸ்புக் இந்தியா நிறுவனம் வணிக நோக்கங்களுக்கு பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகளின் சர்ச்சை பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியிருந்தது.. இந்த பிரச்சனையை ராகுல்காந்தி கையில் எடுத்த, அடுத்த சில மாதங்களிலேயே பேஸ்புக் கொள்கை அதிகாரி அங்கிதாஸ் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

 விசாரணை

விசாரணை

இறுதியில், பாராளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு தலைவரான சசி தரூர் இது சம்பந்தமாக விசாரிக்க முடிவு செய்தார்... நேற்று இந்த குழுவின் முன்பு, பேஸ்புக் இந்தியா தலைவர் அஜித்மோகனும்,அந்நிறுவனத்தின் பொதுகொள்கை இயக்குனர் சிவ்நாத் துக்ரல் இருவருமே ஆஜரானார்கள்.. அவர்களிடம், "உங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு கருதிதான், பஜ்ரங் தளத்தின் பேஸ்புக் பக்கம் முடக்கப்படவில்லையா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அல்லது நிதி காரணங்களால்தான் அது முடக்கப்படவில்லையோ என்றும் கேட்கப்பட்டது..

விளக்கம்

விளக்கம்

இதற்கு அஜித் மோகன் பதிலளிக்கும்போது,"இதுவரை பஜ்ரங் தளம் வெளியிட்டுள்ள பதிவில், எங்களின் சமூக ஊடக கொள்கைகளை மீறும் எந்தவொரு காரணத்தையும் கண்டுபிடிக்கவில்லை.. அதனால், அதை தடை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.. நாங்கள் யாருக்கும் சாதகமாக செயல்படவும் இல்லை" என்றார்.. இதை கேட்ட நிஷிகந்த், அப்படி என்றால், வால் ஸ்ட்ரீட் பத்திரிகையில் வெளிவந்த செய்திக்கு ஏன் நீங்கள் மறுப்பு சொல்லவில்லை.. அது போலியான செய்தி என்றால், அதற்கு மறுப்பு சொல்லி இருக்க வேண்டுமே" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

English summary
Facebook India Bajrang dal Video Controversy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X