டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேஸ்புக் பதிவு சர்ச்சை எதிரொலி.. இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் அங்கி தாஸ்

இயக்குனர் பதவியில் இருந்து விலகினார் பேஸ்புக் அங்கிதாஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவுக்கான பொதுக் கொள்கை பிரிவு இயக்குநர் அங்கிதாஸ் திடீரென தனது பதவியை விட்டு விலகி விட்டார்.

தான் பொதுச் சேவையில் ஈடுபட முடிவு செய்திருப்பதால் பேஸ்புக் பணியிலிருந்து விலகுவதாக அங்கிதாஸ் தெரிவித்துள்ளார்.

 Facebook Indias Ankhi Das quits as head of public

அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் ஒரு ஆய்வுக்கட்டுரையை முன்பு வெளியிட்டிருந்தது. அதில், பேஸ்புக் பதிவுகள் தொடர்பாக பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை அது வெளியிட்டது. அதாவது, இந்தியாவில் பாஜகவினர் செய்யும் வெறுப்பு பேச்சுக்களை நீக்குவது இல்லை... பாஜகவினர் செய்யும் போஸ்ட்களை கண்மூடித்தனமாக பேஸ்புக் ஆதரிக்கிறது.

பாஜக மட்டுமல்லாமல் சில இந்து மத அமைப்புகளின் பேச்சுக்களையும் தடை செய்யாமல் அனுமதிக்கிறது. அதேசமயம், எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிரான கருத்து கொண்டோரின் பேச்சுக்களையும் பதிவுகளையும் முடக்குவதாக அது குற்றம் சாட்டியிருந்தது.

"எங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் இடையே வெறுப்பை விதைக்காதீங்க".. அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

இந்திய அரசை பகைத்துக் கொள்ள பேஸ்புக் தயங்குவதாகவும், அரசை பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு பாகுபாடு காட்டப்படுவதாகவும் வால்ஸ்டீட் ஜர்னல் தெரிவித்திருந்தது.. அதை விட முக்கியமாக, அங்கிதாஸ், பாஜகவுக்கும், மத்திய அரசுக்கும் சாதகமாக நடந்து கொண்டார். பாஜகவினருக்கு எதிராக "வெறுக்கத்தக்க பேச்சு விதிகளைப் பயன்படுத்துவதை அங்கி தாஸ் எதிர்த்தார் என்றும் தெரிவிக்கப்பட்டதால் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து சமீபத்தில் சசி தரூர் தலைமையிலான நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு அங்கி தாஸ் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அவரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன... இந்த நிலையில்தான் பதவி விலகியுள்ளார் அங்கி தாஸ்.

மும்பையைச் சேர்ந்தவர் அங்கி தாஸ்... 49 வயதாகிறது.. பேஸ்புக்குக்கு முன்பு அவர் மைக்ரோசாப்ட்டில் பணியாற்றினார். பத்து வருடமாக பேஸ்புக்குடன் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Facebook Indias Ankhi Das quits as head of public
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X